உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போக்கு வரவு 27 பொருள்களின் உற்பத்தியால் மட்டும் ஒரு நாட்டின் செல்வம் பெருகிவிடாது; உற்பத்தியான பொருள்கள் உள்நாட்டில் தேவையான இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் துறைமுகங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும். இதற்கு வேண்டிய நல்ல போக்குவரவு முறைகள் அமெரிக்காவில் உள்ளன. அமெரிக்காவில் 50 லட்சம் கி. மீட் உருக்குச் சிறந்த சாலைகளும் (அவைபோன்ற சாலைகள் ஜெர்மனி தவிர உலகில் வேறெங்கும் இல்லை. இந்தியாவில், நல்ல சாலைகள் தமிழ்நாட்டில் 50000 கி, மீ.க்கும், மற்ற எல்லா இராச்சியங்களிலும் மொத்தம் ஒரு லட்சம் கிமீ.கும் உள.) 2,27,000 (இந்தியாவில் 37,915) மைல்களுக்கு ரயில் பாதை களும், 7000 (இந்தியாவில் 200-க்கும் குறைவு) ஆகாயவிமான நிலையங்களும் இருக்கின்றன. மேலும் அமெரிக்காவெங்கும் ஒரே அளவு அகலமுள்ள ரயில் பாதைகள் இருக்கின்றன; இந்தியாவைப்போல குறுகிய பாதைகள் (Narrow Gauge) கடுத்தரப் பாதைகள்(Metre Gauge), அகன்ற பாதைகள் Broad Gauge) என்ற வேறுபாடு அமெரிக்காவில் இல்லை; இதனால் எந்த ஓர் இடத்திலிருந்தும் வேறு எந்த ஓர் இடத்துக்கும் ஒரே ரயில் வண்டியில் பொருள்களை அனுப்ப அமெரிக்கரால் முடிகிறது. அமெரிக்காவில், பெரும்பாலும் ஆண் பெண் எல்லோருக்குமே மோட்டார்க்காரை இயக்கத் தெரிந்திருப்பதும், ஐந்து லட்சம் பேர் ஆகாயவிமானம் ஓட்டும் தகுதி உடையவராக இருப்பதும் குறிப்பிடத் தக்கவை. மேலும் தத்தம் பொருள்களுக்கு ஏற்ற வாகன் களையும், 65 லட்சம் ட்ரக்குகளையும் தொழிற்சாலைகள் சொந்த மாக வைத்துக் கொண்டிருக்கின்றன. அப்பொருள்களை அனுப்ப அவற்றையே பயன்படுத்துகின்றனர். அமெரிக்க மக்கள் அமெரிக்கா இன்று ' திருநிறைந்த' நாடாக இருப்பதற்கு, அதன் நீர்வள நிலவள் மேம்பாடு மட்டுமே காரணம்