உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அன்று; இரும்புச் சுரங்கங்கள், எண்ணெய்க் கிணறுகள் தங்க இருப்பு, நல்லூழ்வினை இவற்றால் மட்டுமே அமெரிக் கர் பெருஞ் செல்வராயிருப்பதாகக் கருதுவது தவறு. உரிமையை வற்புறுத்துவது மட்டுமன்றிக் கடமையைச் செய்வதிலும் அமெரிக்கர் கவனமாயிருக்கின்றனர். கடின மான வேலைகளையும் மனமுவந்து செய்வர்; சுறுசுறுப்புடனும் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் எவ்வேலை யிலும் ஈடுபடுவர். அமெரிக்கர் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டுத் தொழி லாளரைப் போலவே சிறந்த உழைப்பாளிகள். தமிழ் நாட்டுத் தொழிலாளர் தம் உழைப்பால் இலங்கை, பர்மா மலேயா போன்ற வெளிநாடுகளின் வளத்தைப் பெருக்கு கினர். அமெரிக்கர் தம் திறமையை தம் நாட்டின்வளத் தையே பெருக்கப் பயன்படுத்தினர்: விஞ்ஞான உதவியை ஏற்றுக் கொண்டனர்; வெளி (ஐரோப்பிய) நாடுகளிலிருந்து மூலதனத்தை வரவழைத்து கொண்டனர்; திட்டமிட்டுப் பெரும் அளவில் தொழில் வளர்ச்சிக்கு அடிகோலினர். இவற்றின் பலனாக 350 ஆண்டுகளுக்குமுன் காடாக இருந்த ஒரு நாட்டை இன்று எல்லா உதவிகளுக்கும் உலகநாடு களில் பெரும்பாலானவை எதிர்பார்க்கும்படி செய்திருக் கின்றனர்! அமெரிக்கரும் இந்தியரும் அமெரிக்கரைப் பற்றி இந்தியருக்குச் சில தவறான கருத்துக்கள் இருப்பது போலவே, இந்தியரைப் பற்றி அமெரிக்கருக்கும் சில தவறான கருத்துக்கள் இருக்கின்றன. இந்தியர் ஒவ்வொருவரும் மன்னராகவோ உலகப் பற்றை ஒழித்த முனிவராகவோ இருப்பர்; இல்லையேல், பிச்சைக் காரராகத்தான் இருக்கவேண்டுமென்றும், இந்தியர் அனைவருக்கும் வடமொழி, சோதிடம், பாம்பு பிடிப்பது ஆகியவை தெரியுமென்றும் இந்தியா, மந்திர வித்தைகள் நிறைந்த நாடென்றும் அமெரிக்கர் நினைக்கிறார்கள். இவை