உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்குத்தான் அமெரிக்கர் ஒவ்வொருவரும் குபேரர் என்பதாகவும், அமெரிக்கச் சாலைகளில் தங்கம் கொட்டிக் கிடப்பதாகவும் ஆம் நாட்டில் பலர் நினைப்பதும் உண்மையாகும். இருவகை இந்தியர்கள் கொலம்பஸ் இந்தியாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்காவை அடைந்தார். தாம் கண்ட நாடு இந்தியா என்று அவர் எண்ணியதால், அந்த நாட்டுக்கு 'இந்தியா' என்றும் அங்கு இருந்த ஆதி அமெரிக்கருக்கு 'இந்தியர்' என்றும் அப்போது கொலம்பஸ் பெயரிட்டார். ஆதி அமெரிக்கர் இப்போது நான்கு லட்சம் பேர் இருக் கின்றனர். அவர்களும் இன்றைய அமெரிக்கரும் தனித் தனியே வாழ்கின்றனர். ஆதி அமெரிக்கர் சிவப்பு நிறத்தவ ராக இருப்பதால், அவர்களுக்குச் சிவப்பு இந்தியர் என்ற பெயர் இப்போது வழங்கி வருகிறது. நம் நாட்டவரைச் சிவப்பு இந்தியரிடமிருந்து பிரித்துக் காட்டுவதற்காக, நம் நாட்டவரின் பாஸ்போர்ட்களில் கிழக்கு இந்தியர் East Indians) என்ற சொற்களையே அமெரிக்க அரசினர் எழுதுகின்றனர். நீக்ரோக்கள் அமெரிக்காவில் இரண்டு கோடி நீக்ரோக்கள் உள்ள னர். இந்தியாவில் ஹரிஜனங்களைப்போல அமெரிக்காவில் நீக்ரோக்கள் இருக்கின்றனர். இந்த இரு பிரிவினரும் இப் போதுதான் பிற இனத்தவருடன் ஒத்த நிலையை அடைந்து வருகின்றார்கள். இந்தியாவில் ஹரிஜனங்களுக்கு இருப்பது போலவே அமெரிக்காவில் சட்டப்படி நீக்ரோக்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. இந்தியாவில் ஹரிஜனங் களின் முன்னேற்றத்துக்கு மகாத்மா காந்தியடிகள் உழைத்தது போலவே, அமெரிக்காவில் நீக்ரோக்களை அடிமைப்படுத்தும் வழக்கத்தை ஒழிக்கவும், அவர்களை வெள்ளையர் சுரண்டு