30 வதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் ஆப்பிரகாம் லிங்கண் முயன்றார். இந்தியாவில் மற்றப் பகுதிகளை விட கேரளத் தில் ஹரிஜனங்களின் நிலை மிக இழிவாக இருந்தது போன்றே, அமெரிக்காவில் மற்ற இராச்சியங்களைவிட பதின் மூன்று தெற்கு இராச்சியங்களில் நீக்ரோக்களின் நிலை தாழ்ந்ததாகவே இருந்து வருகிறது. இந்த இராச்யங்களில் 1978ல் கூட நிறவெறியின் விளைவாகச் சில நிகழ்ச்சிகள் நடந்துள. நீக்ரோக்களுக்கு தனியாக க மருத்துவச் சாலைகள் அமெரிக்காவில் பல இடங்களில் நிறுவப் பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களில் மூன்று ஆண்டுகட்கு முன்னரே நீக்ரோ மாணவர் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். வணிகத்திலும் பிற துறைகளிலும் நீக்ரோக்கள் விரைவாக முன்னேறி வருகின்றனர். அணுகுண்டைக் கண்டுபிடித்த பன்னிரண்டு விஞ்ஞானிகளுள் ஒருவர் ஒரு நீக்ரோ. புகழ் பெற்ற இசைவாணர் பால் ரோப்ஸன் குத்துச்சண்டை வீரர் ஜோ லூயி ஐக்கிய நாடுகள் குழுவின் பிரதிநிதியாக பாலஸ்தீனத்தில் யூதருக்கும் அராபியருக்கும் நடுவராக இருந்து அமைதி நிலவப் பெரும்பாடுபட்டுச் சென்ற ஆண்டில் நோபல் பரிசுபெற்ற டாக்டர் பஞ்சு ஆகியோர் நீக்ரோக்களே. கார்ட்டர், அமெரிக்கக் குடியரசுத் தலைவராக. வந்தபிறகு ஏராளமான உயர் பதவிகளும் நீக்ரோக்களுக்கு. கொடுக்கப்பட்டுள்ளன. பிற அமெரிக்கரைப்போலவே நீக் ரோக்களும் பந்தயங் கட்டி விரைவாகப் பொருள் ஈட்டும் சூதுகளில் பெருவிருப்புடையவர்கள். அமெரிக்கரின் சிறப்பியல்புகள் . அமெரிக்கர் பரந்த நோக்கமும், இளமை, உள்ளமும் எல்லாத் துறைகளிலும் ஆழ்ந்த அறிவும் சிறிது பழகின வுடனேயே பிறரைக் கவரும்படியாக விருந்தோம்பும் குண மும் நிறைந்தவர்கள். பல்கலைக் கழகப் பட்டங்களை அமெரிக் கர் தம் பெயருக்குப்பின் சேர்த்துக்கொள்வதில்லை. அமெரிக்க அரசினர் பட்டங்கள் வழங்குவதுமில்லை. கலை மதப்பற்று, ஆன்மீக விஷயங்கள் ஆகியவற்றில் ஆங்கில
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/31
தோற்றம்