169 பற்றிய கருத்துக்களைப் பரிமாறி, நண்பர்களின் நலனையும் உசாவிவிடுவர்; இரவு உணவை மனைவி மக்களுடன் தத்தம் இல்லங்களில் உட்கொள்ளுவர். பெரும்பாலும் அப்போது தான் குடும்பத்தார் அனைவரும் சந்தித்துக் குடும்பக் காரியங்களைப்பற்றிப் பேசுவது வழக்கம். நேரத்தை வீணாக்கக்கூடாது என்பதே அமெரிக்கரின் கருத்து. காலஞ் சென்ற அறிஞர் பெர்னாட்ஷா இக்கருத்தையே பின்வரும் மேற்கோளில் உறுதிப் படுத்தியிருக்கிறார்:- "நேரமும் பணமும் ஒன்றே. நேரந்தான் நாகரிகம், கலை, இலக்கியம், ஓய்வு, இன்பம் எல்லாம். சுருங்கச் சொன்னால் செழிப்பும் கொழிப்பும் நிறைந்த வாழ்க்கையின் பயனை நன் றாக அனுபவிக்க உதவுவது நேரமே." (Time is money. art, literature, leisure, life more abundant) 17. அமெரிக்க அமெரிக்காவில் It is civilisation, pleasure; in short, இராச்சியங்கள் ஐம்பது இராச்சியங்கள் அல்லது மாநிலங்கள் உள்ளன. வற்றுக்கு ஏராளமான அதிகாரங்கள் உண்டு. இவற்றைப் பற்றிச் சில இன்றியமையாத விவரங் களைத் தெரிந்து கொள்வது இவைபற்றிக் கூறுவோம். 1. அலபாமா நன்று. அகர வரிசைப்படி தலைநகர்-மண்ட்கோமரி குறிக்கோள் சொற்கள்-எங்கள் உரிமையை விட்டுக் கொடோம். இராச்சியத்து மலர்-கமெல்லியா 11-அ 77 பறவை - எல்லோஹாமர் மரம்-பைன் மரம் மக்கள் தொகை - 36 லட்சம்
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/171
Appearance