உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 இரும்பு எஃகு ஆலைகளும் பஞ்சாலைகளும் நிறைந் தது. தெற்கேயுள்ள இராச்சியங்களில் கனரக தொழில் வளர்ச்சியில் முதலிடம் வகிக்கிறது. 2. அலாஸ்கா நிலப்பரப்பால் அமெரிக்க இராச்சியங்களில் இதுதான் பெரிது. தமிழ்நாட்டைப் போல மூன்று மடங்கு உள்ளது. ஏனைய இராச்சியங்களிலிருந்து தனித்து, கனடாவுக்கும் அப்பால் வட அமெரிக்கப் பெருநிலப் பரப்பின் வடமேற்கு மூலையில் உள்ளது. தலைநகர்-ஜூனியோ. புவியியல் வளங் கள், மரம், பெட்ரோல், மீன் ஆகிய செல்வங்கள் மிக்கது. குறிக்கோள் சொற்கள்: 'வாழவேண்டுமானால் வடக்கே போ' சுவீடனைப்போல இங்கும் நள்ளிரவில் சூரியன் பிரகாசிக்கும். 1959-இல் இந்தப் பகுதி, அமெரிக்காவின் பாதுகாப்புத் தேவையைக் கருதி, ஓர் இராச்சியமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அமெரிக்காவிலேயே உயரமான இடம் (6,096 மீட்டர்) இங்கு உள்ளது. 3. அரிசோனா தலைநகர் - பொனெக்ஸ் குறிக்கோள் சொற்கள் - 'கடவுள் நமக்குச் செல்வங் களை வழங்குகிறார்'. செப்பு, தங்கம், வனேடியம், உரேனியம், வெள்ளிச் சுரங்கங்கள் இருக்கின்றன. உற்பத்தித் தொழில் கள் மிகுதியாக உள்ளன. வேளாண்மையும் சுற்றுலாத் தொழிலும் பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளன. 4. அர்க்கன்சாஸ் தலைநகர் - லிட்டில் ராக் மலைகளும் ஏரிகளும் நிறைந்த இராச்சியம், அமெரிக்காவில் இங்கு மட்டும் வைரச் சுரங்கம் உண்டு.