உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பாக்சைட்டில் 97% இந்த இராச்சியத்தில் கிடைக்கிறது. 5. கலிபோர்னியா தலைநகர் - சாக்ரமண்டோ அமெரிக்க இராச்சியங்களில் மக்கள் தொகையால் முதலிடம் வகிப்பது. வேளாண்மை, மீன்பிடித்தல், உற்பத்தித் தொழிற்சாலைகள், பெட்ரோல் கிணறுகள், மர வளம் ஆகியவை நிறைந்தது. இங்குள்ள டெத் வாலி சாவுப்பள்ளத்தாக்கு) கடல் மட்டத்துக்குக் கீழே 85 மீட்டரில் உள்ளது. 6. கொலராடோ தலைநகர் - டென்வர் குறிக்கோள் அசையாது. சொற்கள் - அவனன்றி ஓரணுவும் மொலிப்டினம், யுரேனியம், வனேடியம் ஆகிய அரிய புவியியல் பொருள்கள் அளவுகடந்து கிடைப்பதால் ஆகாய விமான உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் தொழில்கள், விண்வெளிப் பயணம் ஆகியவற்றில் கொலராடோ தலை சிறந்து விளங்குகிறது. 7. கனக்டிகட் தலைநகர் - ஹார்ட்போர்டு ஆயுதங்களும் ஆகாயவிமான இயந்திரங்களும் ஹெலிகாப்டர்களும் உற்பத்தி செய்து அமெரிக்காவைக் காப்பாற்றும் இராச்சியம். 8.டெலவரே தலைநகர் - டோவர்