176 28.நெவடா தலைநகர் - கார்சன் சிடி உற்பத்தி - தங்கம், வெள்ளி, ஈயம், மிகப் பெரிய அளவில் செப்பு 29. நியூ ஹாம்ப்ஷயர் தலைநகர் - கன்கார்டு உற்பத்தி - பழங்கள், அவல், உருளைக்கிழங்கு, வைக்கோல் 30.நியூ ஜெர்சி தலைநகர்- டிரென்டன் இரசாயனத் தொழில்களும் போக்குவரத்துத் தொழில்களும் சிறக்கும் இராச்சியம். பெல் டெலிபோன் உட்பட உலகிலேயே மிகவும் முக்கியமான ஆராய்ச்சிக் கூடங்கள் இந்த இராச்சியத்தில் இயங்குகின்றன. 31. நியூ மெக்சிகோ தலைநகர் - சாந்தா பே குதிரை, ஏனைய கால்நடைகளுக்கும் பயிர்த் தொழில்களுக்கும் சுரங்கங்களுக்கும் புகழ் பெற்றது. 32. நியூயார்க் தலைநகர் - அல்பெனி இந்தியாவுக்கு மஹாராஷ்டிரம் போல, அமெரிக்கப் பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்கும் இராச்சியம் நியூயார்க். உற்பத்தித் தொழில்களாலும், கலைகளாலும், வெளிநாட்டு வாணிபத்தாலும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகங்கள் இருப்பதாலும் புகழ்பெற்றது.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/178
Appearance