184 இன்னும் எரிந்துகொண்டிருக்கின்ற எரிமலைகள் உலகத் தில் உள்ளன. அவற்றில் பெரியது ஹாவாயில் இருக்கிறது. ஹாவாய்த் தீவுகளின் மண் எரிமலைச் சாம்பல்களால் பண் பட்டது. அம்மை நோய் வராதிருக்க வேனிற் காலத்தில் தமிழர் கள் அம்மனுக்கு விழா எடுப்பதுபோல ஹாவாய் மக்கள் எரிமலையால் கேடு வராதிருக்க எரிமலைத் தெய்வத்திற்கு விழா நடத்துகிறார்கள். அரசாங்க விழாக்களிலும் புதிய கட்டிடங்கள் திறப்பு விழாக்களிலும் 'காஹீனா' என்ற பழங்காலப் பூசாரிகள் கலந்துகொள்வார்கள். 'எரிமலையிலிருந்து இக்கட்டிடத்தைக் காப்பாற்று' என்று இறைவணக்கம் பாடுவார்கள். மகனுக்கு மட்டும்... சாபம்,ஏவல் ஆகியவற்றை ஹாவாயர் நம்புகிறார்கள்.. அவற்றிற்கு காஹீனாக்களிடம் மந்திரிப்பது வழக்கம். அவர் கள் மூலிகை, புல், உப்பு, களிமண் ஆகியவை பற்றிய அறிவும், நாட்டு மருத்துவ முறையில் தலைமுறை தலைமுறை யாக அனுபவம் பெற்றவர்கள். அந்த இரகசியங்களை இறக்கும் தருவாயில் மூத்த மகனுக்குமட்டும் சொல்லிக் கொடுப்பார்கள். தேவதாசி ஹுலா என்பது ஹாவாய் நடன வகைகளில் ஒன்று. இந்த நடனத்தைப் பயின்ற பெண்கள் 'லாஹா' என்ற தெய்வத்தின் கோவிலில் பல ஆண்டுகள் பணிவிடை செய்து, மரபுப்படி கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கிறார்கள். கலப்பு மணம் ஹாவாயின் பூர்வீக மக்கள் ஹாவாயர். அவர்கள் தொகை 30,000.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/186
தோற்றம்