183 குளிப்பின் வைக்கிக்கி பீச் குளிப்பதற்கே ஏற்பட்டது. அதைப் வற்றி ஒரு குறளும் உண்டு: "குளிப்பின் வைக்கிக்கி பீச்சிலேயே குளிக்க அஃதின்றேல் குளிப்பின் குளியாமை நன்று" அமெரிக்காவுக்கு மேற்கே, 4,000 கி. மீ. தொலைவில் பசிபிக்மாக் கடலில் இந்தத் தீவுகள் உள்ளன. நூறு ஆண்டு களுக்கு முன், உரிமை இழந்து அமெரிக்காவுடன் இணைந்தன. ஏனைய அமெரிக்க மாநிலங்களைப்போல ஹாவாயும் மாநில சுயாட்சி பெற்றிருக்கிறது. இந்தியாவுக்கு அந்தமான் : அமெரிக்காவுக்கு ஹாவாய் அந்தமான் கூட்டத்தில் பெரிய தீவு அந்தமான். ஹாவாய் முதலிய எட்டுத் தீவுகளில் பெரியது ஹாவாய். அந்தமானிலும் ஹா வாயிலும் இல்லாதது பாம்பு. இரு தீவுக் கூட்டங்களிலும் அடர்த்தியான காடுகளும் மிகப் பெரிய மரங்களும் உள்ளன. வேலைப்பாட்டால் புகழ் பெற்ற மரச் செயப்படு பொருள்களும் கிடைக்கின்றன. அமெரிக்காவின் சிறந்த கடற்படைத்தளமாக ஹாவாயி லுள்ள 'பேர்ள் ஹார்பர்' விளங்குகிறது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் நிலை 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்ற ஹாவாயில் இல்லை. இங்குள்ள மக்கள் ஏராளமான கடவுளரை வழிபடுகிறார்கள். சூரியனையும் வழிபடுகிறார்கள்; கல்லையும் கடவுளாக மதிக்கிறார்கள்.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/185
தோற்றம்