உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 19. ஹாவாய் கரும்பு ஏராளமாக விளைந்து வெளிநாடுகளுக்குக் கப்பல் கப்பலாக சர்க்கரை அனுப்புகிறது சின்னஞ்சிறு ஹாவாய். இத் தீவுகளின் பரப்பு தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தின் அளவு. சர்க்கரை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், தகரங்களில் அடைத்த அன்னாசிப்பழம் இவை ஹாவாயின் செல்வங்கள். கேளிக்கை வாழ்க்கை கப்பல்களிலும் விமானங்களிலும் இடம் இருக்கும்வரை வெளிநாட்டார் ஹாவாய்க்கு வருகிறார்கள். அழகான காட்சி களைப் பார்க்க, நடனங்களைக் கண்டுகளிக்க, வண்ண வண்ண மலர்மாலைகளை அணிய, இனிப்பான பழங்களை இன்பமுடன் சுவைக்க, மீன் வகைகளை வயிறு நிறைய உண்ண, பழங் காலத்து மெட்டுக்களில் இசைப் பாடல்களைக் கேட்க, படகுகளை ஓட்டிப் பரவசம் அடைய, கலை நிகழ்ச்சிகள் ஏராளமாக அமைந்த ஓயாத திருவிழாக்களைப் பார்க்க, படமெடுக்க உலகத்தில் உண்டானது ஹாவாய். மெரினாவும் வைக்கிக்கியும் ஹாவாயின் வைக்கிக்கிக் கடற்கரை அழகானது. அதன் நீளம் ஏழு கி.மீ. புராணத்திலும் இதிகாசத்திலும் இடம்பெற்றது வைக்கிக்கி பீச். அதைப் பற்றி, தலைமுறை தலை முறையாகப் பாடல்கள் உள்ளன. க சென்னை மெரினாவில் தங்கும் விடுதிகளாக ஓட்டல்கள் இல்லை. வைக்கிக்கியில் 150 ஓட்டல்கள் உள்ளன. மாட மாளிகைகளும் உண்டு. மாடியில்லாத ஓட்டல்களும் உண்டு.