உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 தொகை ஈவுப்படி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார் கள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்தமுறை கையாளப்பட்டிருந்தால் இந்தி மொழிபேசும் மாநிலங்கள் ஏனையோரை ஆட்டிப் படைக்கும் அவல நிலை ஓரளவாவது குறைந்திருக்கும். இப்போது மாநிலங்கள் அவை என்று பெயர் இட்டுக் கொண்டு, மற்றொரு மக்கள் சபையைத் தேர்ந்தெடுக்கிறோம். அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டப்படி எல்லா இராச்சியங்களிலும் உள்ள துறைமுகங்களுக்குச் சரிசமமான உரிமைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதை மாற்றுவ தற்கான அதிகாரம் அமெரிக்க அரசுக்கோ காங்கிரஸ் செனேட் (ஹவுஸ் ஆப் ரெப்ரசன்டேடிவ்ஸ், இரண்டு சேர்ந்தது)க்கோ கிடையாது. ஆனால், இந்தியாவில் குஜராத்தில் கண்ட்லா என்ற சுங்க வரியில்லாத சுதந்தரத் துறைமுகம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அத்தகைய வசதி நிலவிய புதுச்சேரிக்கு அந்த உரிமை மறுக்கப்படுகிறது. அமெரிக்காவில் அரசியல் கட்சிகள் என்ற அடிப் படையில் தேர்தல் நடைபெறுகிறது. எனினும், மக்களின் வாக்குகளால்தான் குடியரசுத் தலைவரும் இராச்சியங்களின் ஆளுநர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த உரிமை கிடையாது. வுடன் மக்களின் ஆதர இவ்வாறு கோடிக்கணக்கான தேர்ந்தெடுக்கப்படும் தலைவரும் ஆளுநர்களும் தலைமை அமைச்சர், முதல் அமைச்சர்கள் ஆகியோருடைய அதிகாரங்களைப் பெற்று அமைச்சரவை அமைக்கிறார்கள். அவர்கள் நியமிக்கும் அமைச்சர்கள், நாடாளு மன்றம், மாநிலங்கள் அவை, சட்டமன்றம் முதலியவற்றில் உறுப்பின ராக இருக்கவேண்டும் என்ற நியதி அங்கு இல்லை. எனவே, திறமைமிக்கவரை அமைச்சுப் பொறுப்புக்கு நியமிக்க அங்கு. வாய்ப்பு நிலவுகிறது.