உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 எலிசபெத் ஸேட்டன் கல்லூரியில் சேர்ந்து படிக்கின்றனர். லாரா, மொழிகள் கற்கிறார்: ஜான் வரலாறு, இலக்கியம் இரண்டிலும் பட்டம்பெறப் படிக்கிறார். 'நள்ளிரவு உயர்நிலைப்பள்ளி' என்பது மிசிகனில் வான் டைக்கில் உள்ளது. பள்ளி நேரம் நள்ளிரவு முதல் காலை -3 மணி வரை, எனவே அருகே உள்ள ஃபோர்டு மோட்டார் தொழிற்சாலையில் இருக்கும் தொழிலாளர்கள் இரவு 11 மணிக்கு வேலை விட்டதும் இப்பள்ளிக்கு வருகின்றனர்; காலை 3 மணி வரை படிக்கின்றனர். எட்டாவது படிவம் வரை படித்து பள்ளியை விட்டவர் டாரிஸ்; இப்பொழுது இந்த வாய்ப்புக் கிடைத்தது குறித்து இவர் மகிழ்ச்சி அடைகிறார். முதியோர் கல்வி, மாலைப் பள்ளி, இரவுப் பள்ளி என்று பல பெயர்களைக் கொண்ட இக்கல்வித் திட்டம், 'கல்வி என்பது இளைஞர்களுக்கே உரித்தான ஒன்று' என்ற கருத்தினைச் சிதற அடித்துவிட்டது. இருபது வயதான இளைஞர் ஒருவர், கல்லூரியில் படிக் கிறார். தரைகளை மெழுகுவது, அறைகளை தூய்மைப்படுத்து வது, சன்னல்களைக் கழுவுவது போன்ற வேலைகளைச் செய்து அலுத்துப்போய் வேறு வேலைக்குப் போக முடியாது என்ற நிலையை அடைந்தபோது தன் கல்வி அறிவை வளர்த்துக்கொள்ள முடிவு செய்து, உயர் நிலைப்பள்ளித் தேர்வுக்குச் சமமான ஜி.சி.டி. தேர்வு எழுதப் பள்ளியில் சேர்ந்துள்ளார். கல்லூரியில் சேர்ந்த புதிய மாணவர்கள் பல யினர். வகை ஹாரி கெர்ஷ் : 63 வயதான இளைஞர் இவர்! புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கும் முதல் ஆண்டு மாணவர். இவர் கூறுகிறார்: "ஓய்வுபெறும் வயதைத் தாண்டிவிட்ட நான், கேளிக்கைகளிலும் விளையாட்டுக்களி கூ