உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 லும் புகுந்திருக்கலாம். ஆனால் என் மனம் அவற்றை நாட வில்லை. முறையான கல்வியை இழந்தவன் நான். அதணை இப்பொழுது ஈடுகட்ட விரும்புகிறேன். புதிய வேலைக்கோ தொழிலுக்கோ நான் இப்பொழுது படிக்கவில்லை. அறிஞர்களின் உரைகளைக் கேட்பதும், சிறந்த நூல் களைக் படிப்பதும், அறிஞர்களுடன் உரையாடுவதும் உள்ளத்துக்கு நிறைவைக் கொடுக்கின்றன." ஹிக்கின் போதாம் 63 வயதானவர். இலக்கியம் கற்க. டெட்ராய்ட்டில் இருக்கும் வேன் மாநிலப் பல்கலைக்கழகத் தில் சேர்ந்திருக்கிறார். "இந்த வயதிலே புதிய வேலை தேடம் போகிறேனா என்ன? கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக். கின்றன. சிறிதளவாவது கற்றுக்கொள்ளலாமே என்றுதான் கல்லூரியில் சேர்ந்திருக்கிறேன் என்கிறார். வேலையில் முன்னேற்றம் பெறுவதையோ, பட்டம் பெறு வதையோ குறிக்கோளாகக்கொள்ளாமல் கல்லூரியில் சேர்ந் திருக்கும் வயது வந்தவர்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். கல்வி கற்கும் மகிழ்ச்சியை அனுபவிக்கவே சேர்ந்துள்ளதாக இவர்கள் கூறுகின்றனர். இவர்களுக்குத் தனிப் பாடங்கள் இருக்கின்றன. 'ஓய்வு நேரத்திட்டம்' என்பதுதான் இதன் பெயர். ஓய்வுநேரக் கல்வி, முதியோர் கல்விக் கழகங்களில் மட்டுமல்ல, அமெரிக்காவில் ஓராயிரத்திற்கு மேற்பட்ட சமூகக் கல்லூரிகளிலும் உள்ளன. உணவு நேரத்திலும் பாடத் திட்டம் ஒன்று நடக்கிறது.. பாஸ்டன் நகரில் இருக்கும் வணிகர்கள், தொழிலதிபர்கள் இதில் பங்கெடுத்துக் கொள்ள வசதியாக இருக்கிறதாம். "டூ ஸம்திங் டிஃபரண்ட் இன்கார்ப்பொரேடட்" (Do Some- thing different Incorporated) என்பது ஒரு நிறுவனத்தின் பெயர். (மற்றவர்கள் செய்யாத வேறு ஏதாவது செய்யுங்கள். இதுவும் ஒரு முதியோர் கல்வி நிலையமே. இதில் 3,500 மாணவர் பயிலுகின்றனர்.