உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 மாணவர்களின் வசதிக்கு ஏற்ப, அவர்களுக்குப் படிப்பு நேரம் ஒதுக்கப்படுகிறது. ளது. இந்நிலையம், இன்னுமொரு புதுமையைக் கையாண்டுள் மகளிர் சங்கங்கள், விளையாட்டுச் சங்கங்கள் டெட்ராய்ட் பெருநகர் நிலையம், ஒய்.எம்.சி.ஏ முதலிய வற்றின் வாயிலாகவும் கல்வித் திட்டங்களை வேறு இடங் களிலும் கூடக் கல்வி வழங்க இது தயாராக இருக்கிறதாம். வ 21. அமெரிக்காவில் சிற்றூர்கள் - நம் நாட்டில் கிராமங்கள் - நகரங்கள் என்ற வேறுபாடு நிலவுகிறது. நகரம் நாகரிகத்தின் சின்னம். கிராமம் பழமையின் இருப்பிடம். நகரம் - கல்வி, மருத்துவம், மின்சார வசதிகள் நிறைந்தது. கிராமம்- இவ்வசதிகள் எதுவுமே இல்லாதது. கிராமம் வாழ வசதியில்லாதவர் களும், ஓய்வுபெற்றவர்களுமே வாழும் பகுதி. சுருங்கச் சொன்னால் கிராமத்தாரை 'பட்டிக்காட்டார்கள்' என்று, நகரங்களை விட்டு நகராதவர்கள் கருதுகிற நிலை நம் நாட்டில் உண்டு. இந்த நிலை அமெரிக்காவில் கிடையாது. ஒன்று அமெரிக்காவில் கிராமங்கள் இரு வகையின. ஒரு வேளாண்மைப் பண்ணையைச் சுற்றிய குடியிருப்பு, மற்றொன்று மக்கள் தொகை குறைந்த சிற்றூர். இவ்வூர் களில் ஓராயிரத்துக்குக் குறைவானவர்கள் வாழ்ந்தபோதி லும் இவற்றுக்குச் சிறு நகரம் (SMALL TOWN) என்ற மரியாதையான பெயர் வழங்கப் பெறுகிறது. சிறு நகரங்களில் நீக்ரோ கலவரம், இனக்கலவரம், கார்களை நிறுத்த இடமில்லாமல் தவிப்பது என்ற பிரச்சினை கள் கிடையா. இந்தச் சிற்றூர்களிலும் குழாய் வசதி, வடிகால் வசதி, வானொலி - தொலைக்காட்சி வாயிலாக உயர் படிப்புப் படிக்கும் வாய்ப்பு ஆகியவை உள்ளன.