200 இல்லை என்ற அடிப்படையில் அமைவதுதான். இந்த இரண்டு வகைப் பதில்களை வைத்துக்கொண்டே, எவ்வளவோ சிக்கலான பிரச்சினைகளையும் தீர்க்க இயலு கிறது. எளிதில் நாம் தீர்க்க முடியாத பல கணிதப் பிரச்சினை களைக் கணிப்பொறியைக் கொண்டு தீர்க்கிறோம். கணிப் பொறி கூட்டல், கழித்தல் என்ற இரண்டு கணிதப் பணி களைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாதது. எவ்வளவு. பெரிய நிகரிகள் (Equations) அல்லது சமன்களைத் தீர்ப்ப தானாலும், அந்த வழிவகையை வெறும் கூட்டல், கழித்தல் என்ற அடித் தளச் செய்முறைக்குக் கொண்டு வந்து தான் மேற்கொண்டு அந்தக் கணக்குகட்கு விடை காண வேண்டும். நுட்பமானதும், ஆழ்ந்து கற்றவர்கட்கே எளிதில்' புரியாததுமான கணித முறைகள் அனைத்தையும், கூட்டல், கழித்தல் அடிப்படையில் கொண்டு வர இயலும் என்பதும் எண்ணி எண்ணி வியக்கத் தக்கது. மிக எளிய சான்றாக இரண்டை எண்ணூறால், பெருக்குவதாக வைத்துக் கொள்வோம். கணிப்பொறி இரண்டை, எண்ணூறு முறை கூட்டி விடை கண்டுபிடிக்கும். நடுத்தரக் கணிப்பான்கூட, ஒரு வினாடியில் 3,50,000 கூட்டல் போட முடியுமாதலால், இதனால் எந்தக் கால விரையமும் ஏற்படுவதில்லை. கணிப்பொறி 1950-ஆம் ஆண்டு அளவில் கண்டுபிடிக்கப் பட்டது. இப்போது அது அமெரிக்காவில் விண்வெளிப் பயணத்திற்கும், செய்தித்தாள்களின் வளர்ச்சிக்கும், நாட்டுப் பாதுகாப்பிற்கும் பயன்படுகிறது. அது பயன்படுத்தப் படாத துறையே இல்லை. தான் தொட்ட துறைகள் அனைத்தையும் பன்மடங்கு புதுமையும் பொலிவும் பெறச் செய்திருக்கிறது. அறிவுலகில் பல முன்னேற்றங்களுக்கு வித்திட்டு இருக்கிறது. ஒரு சான்று மட்டும் கூறுவோம். அமெரிக்காவில் செய்தித்தாள்கள் வெளிவரும் முறை அடியோடு மாறிவிட்டது. 1978- ஆம் ஆண்டிலிருந்து நியூயார்க் டைம்ஸ் " என்னும் நாளிதழ் கணிப்பொறியின் துணையுடன் அச்சிடப்படுகிறது. "
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/202
தோற்றம்