சொன்னால் 201 நம்பமாட்டீர்கள் பல வண்ணங்களில் 70 அல்லது 80 லட்சம் அச்சாகும் "நியூயார்க் டைம்ஸ்" அச்சகத்தில் இப்போது டைப்ரைட்டர் எனப்படும் தட்டச்சுக் கருவிகளுக்கோ, லைனோடைப் எனப்படும் எழுத்தைக் கோக்கும் இயந்திரங்களுக்கோ வேலையில்லை. செய்திகளை யும், கட்டுரைகளையும் தாள்களில் எழுதும் பணியாளர்களுக் கும் வேலையில்லை. இந்த வேலைகளையெல்லாம் கணிப்பொறி கள், கண்மூடிக் கண்திறப்பதற்குள் செய்துவிடுகின்றன. செய்தி நிருபர்கள் இந்தக் கருவியில் கை வைத்தால் அவர் களுடைய குறிப்போ, செய்தியோ, கட்டுரையோ உரிய வடிவம் பெற்றுவிடும். அதைச் சரிபார்க்கும் ஆசிரியர் கணிப் பொறியில் சில கருவிகளை இயக்கினால் சொற்றொடர்களை மாற்றி விடலாம். புதிய அடைமொழிகளைச் சேர்த்துவிடலாம். தலைப்பையும் கொடுத்து விடலாம். இந்த வேலைகளைச் செய்யும் இயந்திரத்துக்கு கம்ப்யூட்டர் டெர்மினல் என்று பெயர். இதில் தட்டச்சுக் கருவியில் இருப்பது போன்ற ஆனால் ஏராளமான சாவிகள் இருக்கின்றன. இறுதிக் கட்டத்தில், முடிவான நிலையில் உள்ள செய்தி அல்லது கட்டுரை, விளக்குகள் நிறைந்த ஓர் இயந்திரத்துக்குள் போய் போட்டோ படங்களுடன் அச்சாகி, அந்த இதழின் ஆசிரியர் விரும்புகிற அளவிலும் முறையிலும் பத்தி பத்தியாக அச்சாகி இயந்திரத்திலிருந்து வெளியேறுகிறது. இப்போது இந்தச் செய்தி இதழின் அலுவலகம் மிக அமைதியாகவும், ஆரவாரம் இல்லாமலும் நடைபெறுகிறது. ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு கணிப்பொறி யின் மூலம் செய்திகளை அனுப்புவதற்கான ஆராய்ச்சியில் அமெரிக்கர் ஈடுபட்டிருக்கிறார்கள். செய்தி இதழ்களை வெளியிடும் இம்முறையில் அமெரிக்கா மேலும் வளர்ச்சி பெறுமானால் சென்னையில் நிகழும் ஒரு நிகழ்ச்சி பற்றிய தகவல் மதுரையில் செய்தித்தாளில் அச்சிடப் பெறுவதற்கு முன் அமெரிக்காவில் அச்சிடப்பெற்றுவிடும். 13-அ
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/203
தோற்றம்