202 24. அமெரிக்கப் பொருட்காட்சிகள் அமெரிக்காவின் மூன்றாவது துறைமுகமும் முன்னாள் தலைநகருமான பிலடல் பியாவில், வணிகப் பொருட்காட்சிச் சாலை (Commercial Museum) க்குச் சென்றேன். இக்காட்சி யுள்ள கட்டிடத்தில்தான் புகழ்பெற்ற கன்வென்ஷன் ஹால் என்ற மாநாட்டு மண்டபம் இருக்கிறது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தத்தம் அபேட்சகர்களைத் தேர்ந்தெடுக்க அமெரிக்க அரசியல் கட்சிகள் இங்கேதான் கூட்டங்களை நடத்துகிறார்கள். 15,000 பேர் அமரக்கூடிய இம்மாபெரும் மண்டபத்தில் தூண்களே இல்லை. இத்தகைய சிறப்பான இடத்தில், 1894- இல் தொடங்கப் பட்ட. வணிகப் பொருட்காட்சிச்சாலை, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தாரால் நடத்தப்படுகிறது. வர்த்தகப் பொருள்கள் இங்கே ஒன்று சேர்ப்பதைத் தவிர, பல மொழிகளில் வணிகருக்கு வரும் கடிதங்களை அவரவர் மொழிகளிலும் மொழி பெயர்த்தல், உற்பத்தியாளர்களை யும் விற்பவர்களையும் இணைத்தல் போன்ற பணிகளையும் இந்தச் சாலையார் செய்கின்றனர். பல சிறந்த பொருட்காட்சிக் கூடங்கள் நியூயார்க் நகரில் உள்ளன. நான் 20 நாட்கள் இந்நகரில் தங்கியும், இவற்றில் ஒன்றையேனும் பார்க்காததிலிருந்து, நியூயார்க்கில் நேரம் கிடைப்பது எவ்வளவு அரிது என்பது புலனாகும். அமெரிக்கர் ஒவ்வொருவரும் தத்தம் இயல்புக்கேற்ற அளவு அவரவர் இல்லங்களிலேயே, சிறிய பொருட்காட்சிக் கூடங்கள் அமைத்து, அவற்றில் தாம் சென்ற இடங்களின் நினைவாகச் சிற்சில பொருள்களைப் பேணி வருவதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. சீனரும் தாம் குடியேறிய நகரங்களிலெல்லாம், சைனா டவுன் என்ற பகுதிகளில் சீன ஆலயங்களும் சீனக்கலைம்
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/204
Appearance