உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 பொருட்காட்சிகளும் அமைந்திருப்பதோடு, அங்குச் செல்லு வோரிடையே சீன மொழியையும் சீன உணவுகளையும் பரப்புகின்றனர். அருங்காட்சியகங்கள் சில "Exhibition, Museum" என்ற இரு சொற்களுக்கும் தனித்தனிக் கருத்துக்கள் உண்டு. எக்சிபிஷன் என்பது குறிப்பிட்ட ஒரு நோக்கத்துடன் திருவிழாவாகச் நாட்களுக்கு மட்டும் வியாபாரத்துக்காக நடத்தப்படுவது, ஈண்டு, நாம் குறிப்பிடுவது மியூசியம் என்பதே ஆகும். முற்காலத்தில் வழங்கிய பொருள்களையும், இக்காலத்தில் ஒவ்வொரு நாட்டிலும் மூலைமுடுக்குகளில் பரவிக்கிடப்பன வற்றையும் ஒரே கட்டிடத்தில் ஒருங்கே பார்க்க இயல்வதற் குரிய இடமே மியூசியம் ஆகும். இதை 'அருங்காட்சியகம்' எனலாம். 25. உயிரினக் கூடங்கள் நாள்தோறும், பல்லாயிரம் மக்கள் உயிரினங்களைப் பார்க்கச் செல்லுகின்றனர். கடற்கரை அல்லது மலைப்பகுதி போன்று, ஓய்வுபெறும் ஓர் உல்லாச இடமாக உயிரினக் கூடங்களை அமெரிக்கர் கருதுகிறார்கள். நாய், பூனை, தவிர வேறு உயிரினங்களை நாள்தோறும் பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடையாது. இக்காரணத்தாலும் நெருக்கம் மிகுதியான நகரங்களிலிருந்து சிறிது நேரம் விடுதலை பெறு வதற்காகவும் அமெரிக்கர் அடிக்கடி அந்த நிலையங்களுக்குச் செல்லுவர். உயிரினக் கூடங்கள் நாள்தோறும் வளர்ச்சியடைந்த வண்ணமாக உள்ளன. புதிய உயிரினங்களைச் சேகரித்து, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை காலையில் வெளிவரும் செய்தித்தாள்களில் அவற்றின் படங்களையும் விளக்கக் கட்டுரைகளையும் வெளியிடுகிறார்கள். ஒவ்வொரு உயிரினக்