உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 காட்டிலும் நல்ல உடற்கட்டோடு இருப்பதால், உடலமைப்பை யாவது உயரத்தையாவது பார்த்து, அவர்களுடைய வயதை மதிப்பிடுவது பொருத்தமாகாது. ஒரு பொது நீதிபதிக்குக் கட்டுப்பட்டு நடப்பது, தலைவருக்குக் (Captain) கீழ்ப்படிவது, தம் பகுதியைச் சேர்ந்த பலரோடு இணைந்து ஒற்றுமையாயிருப்பது, இறுதி யில் போட்டியில் வெற்றிபெற்றாலும் பெறாவிட்டாலும் எதிரி களையும் நண்பர்களாகக் கொள்ளுவது ஆகிய பழக்கங் களும் விளையாட்டுக்கள் வாயிலாக உண்டாகின்றன. இப் பழக்கங்கள் பரவவேண்டுமென்ற நோக்கத்தோடுதான் "ஒலிம்பிக்' போன்ற போட்டிகள் பல நாடுகளுக்கிடையே பெருஞ் செலவில் நடத்தப்படுகின்றன. விளையாட்டுக்களின் சிறப்பு பிற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவிலும் ரஷ்யா விலும் விளையாட்டுக்களுக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. இந்த நாட்டு இதழ்களின் தலைப்புச் செய்திகள் போட்டி முடிவுகள் அல்லது அல்லது ஒரு புகழ்பெற்ற ஆட்டக்காரருக்கு நேர்ந்த சிறு விபத்து முதலியவற்றைப் பற்றியே இருக்கும். அமெரிக்காவில் விளையாட்டு அரங்கங்கள் அமெரிக்காவில் அட்லாண்டிக் மாக்கடல் முதல் பசிபிக் மாக்கடல் வரையும், கனடா நாட்டு எல்லை முதல் நடு அமெரிக்க நாடுகளின் எல்லை வரையிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட திறந்த வெளி விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. கார்டன் கட்டிடத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும் அமைக்கப்பட்டிருக்கும் விளையாட்டு அரங்குகளில் நியூயார்க் நகரத்து மாடிசன் ஸ்கொயர் என்பது தான் பெரியது. 'அமெரிக்கரின் விளையாட்டு அரண்மனை'யான இம்மண்டபத்தில் நாள் தோறும் பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.