உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 நான் சென்ற அன்று, பனிக்கட்டியின் மீது ஆடும் ஹாக்கிப் போட்டி நடந்தது. இந்த ஆட்டந்தான் எல்லா விளையாட்டுக்களிலும் விரைவுடையது. நுழைவுச் சீட்டு வாங்கச் சென்ற அமெரிக்க நண்பர் ஒருவர், விளையாட்டிடத் தில் அமருவதற்கான குறிப்புக்கள் அடங்கிய விளக்கமான படங்களுடனும், ஆட்டத்தைப் பற்றிய சட்டதிட்டங்கள், ஆட்டக்காரர்களின் படங்கள், வரலாறுகள், அடையாளங்க கள், 'அம்பயர்' பலவிதமாகக் கை காட்டுவது, விசில் ஊதுவது இவற்றின் பொருள்களெல்லாம் அடங்கிய கையேடுகளோடும் திரும்பிவந்தார். இரவு 8 மணிக்குச் சிறிது முன்பு உள்ளே சென்றோம். அப்போது ஏறத்தாழ ஐம்பதாயிரம் பார்வையாளர் அங்கே வீற்றிருந்தனர். நாட்டு வணக்கப் பாடலும் சில அறிவிப்புக்களும் நடந்த வுடன் ஆட்டம் தொடங்கிற்று. போட்டோப் படக்காரர்கள் படம் பிடித்தவண்ணமாயிருந்தனர்.வானொலி நிருபர்களின் அறிவிப்பும் தொடங்கிற்று. தொலைக்காட்சி ஒளிபரப்பும் நடந்தது. திரைப்படங்களும் எடுக்கப்பட்டன. இத்தனை ஆரவாரங்களுக்கும் இடையே பார்வையாளர் கட்டும் பாடாக இருந்தனர். அமெரிக்கரின் பலவகை விளையாட்டுக்கள் அமெரிக்கரின் மற்ற விளையாட்டுக்கள் - மோட்டார் ஓட்டும் போட்டிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டும் போட்டி கள், ஆகாய விமானம் ஓட்டும் போட்டிகள், பெருங்கடல் களிலும் ஏரிகளிலும் மீன்பிடித்தல், படகு ஓட்டுதல் அம்பு எய்தல், வில் எறிதல் வாள் போர், மற்போர், கண்ணைக் கட்டிக்கொண்டு கால் பந்தாடுதல் (Blind Football), பனிக்கட்டியின் மீது ஓடுதல் முதலியனவாம். துப்பாக்கி யால் சுடுவதில், ஒலிம்பிக் பதக்கம் பெற்றவர் சுவிஸ் நாட்ட வரைத் தவிர, அமெரிக்கரே ஆவர். அமெரிக்காவில் மிகப்பலர் ஆடும் ஒரு விளையாட்டு பௌலிங் (Bowling) என்பது. மரத்தாலும் எஃகாலும் செய்யப்பட்ட 6 கிலோ எடையுள்ள பந்துகளை, ஸ்பிரிங்