உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207 உள்ள ஒரு பலகையின் மீது 30 மீட்டர் தொலைவுக்கு உருட்டி, அப்பந்தைக் குழிக்குள் விழச் செய்வதே இந்த ஆட்டமாகும். இதை நள்ளிரவு வரையில் ஆடும் அமெரிக்கர், சிற்றூர்களிலும் உள்ளனர். நள்ளிரவில் டென்னிஸ் ஆடுவதும் அமெரிக்கர் இயல்பா கும். பகலில் ஓய்வு இல்லாதிருப்பதும், எவ்விதமாவது நாள்தோறும் விளையாட வேண்டுமென்ற மன உறுதியுமே இப்பழக்கத்துக்குக் காரணமாகும். 'டேவிஸ் கப்' என்ற டென்னிஸ் ஆட்டத்தின் தலைமையான பரிசையும் பல ஆண்டுகளில் அமெரிக்கர் பெற்றுள்ளனர். புகழ்பெற்ற டென்னிஸ் வல்லுனர் பிறருக்கு டென்னிஸ் ஆட்டம் பயிற்றும் கல்லூரிகள் நடத்துகின்றனர். அமெரிக்க நாட்டு விளையாட்டான பேஸ்பாலில் சிறந்த ஆட்டக்காரர்கள் தம் குழுவில் சேர்ந்து கொண்டு, நான்கு மாதங்கள் ஆடுவதற்காகப் பல கழகத்தார் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் ஒரு நூறாயிரம் ரூபாய்வரை கொடுக்கின் றார்கள். இதனால் விளையாட்டும் ஒரு தொழிலாகிவிட்டது. ஆட்டக்காரர்களிலும் (1) ஆட்டமே தொழிலாக உள்ளவர் (2) பொழுது போக்குக்காக ஆடுபவர் என்ற பாகுபாடு ஏற்பட்டிருக்கின்றது. விளையாட்டுக்களுக்கான கருவிகளைச் செய்து, அவற்றை விற்றுப் பெருஞ் செல்வரானவரும் மிகப் பலராவர். அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் மிகப் பெரிய விளையாட்டு அரங்கங்களும் உடற்பயிற்சி நிலையங் களு தம் உள்ளன. ஆண்டுதோறும் விளையாட்டுக்களில் 100 கோடி ரூபாய்க்குமேல் அமெரிக்கர் செலவிடுகின்றனர். சுருங்கச் சொன்னால், அமெரிக்கரில் இந்தத் தலைமுறையினர் ஆடவரும் பெண்டிரும் - தம் வாழ்நாள் முழுவதும் விளையாட்டுப் பித்துடையவராயிருக்கின்றனர். இவ்வகை யில் இவர்களுக்கு ஒப்பாரும் மிக்காரும் வேறெங்கும் இல்லை.