உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 வரவேற்பு என்னைத் தம் விருந்தினராக ஏற்றுக்கொள்ளும் அவரு டைய நண்பரான மிஸ்டர் வொல்லர்மனையும் உடனழைத்துக் கொண்டு இரயில் நிலையத்துக்கு டாக்டர் இராசம்மாள் வந்திருந்தார்கள். சிறிது நேரத்தில் வொல்லர்மனின் இல்லத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். பிறநாட்டவர் வீட்டில் தங்கும் வாய்ப்பு, எனது உலகச் செலவிலேயே இந்நகரில் மட்டுமே கிடைத்தது. வொல்லர்மன் குடும்பத்தார் என்னைத் தம் விருந்தினராகப் பெற்றதைப்பற்றிப் பெருமைப்பட்டார் கள். இராசம்மாள் அவர்களின் மற்ற நண்பர்கட்கும் உவப் பளிப்பதற்காக, ஹகோலா குடும்பத்தாரோடும் ஹௌ குடும்பத்தாரோடும் சிற்சில நாட்கள் தங்கினேன். அமெரிக்கரின் ஒழுக்கம் கடவுள் வழிபாடு செய்தபின்னரே இக்குடும்பத்தினர் உணவருந்தியது, அமெரிக்காவில் நான் எதிர்பாராத தொன்று; மேலும், நான் தங்கிய இக்குடும்பங்களில் ஒன்றி லேனும், ஒருவரும் குடிவகைகளைப் பயன்படுத்தவில்லை. என்னால் அவர்கள் குடிக்காமலிருக்கிறார்களே என்று நான் வருத்தப்பட்டபோது, "நாங்கள் மட்டுமன்று; எங்களைப் போலவே, கிருஸ்துமஸ் தவிர ஏனைய நாட்களில் குடிக்காத பல்லாயிரம் அமெரிக்கர் இருக்கிறார்கள்' என்று அவர்கள் கூறினர். நான் போய்ச் சேர்ந்த நாள் மிகச் சிறப்பான நாள்: அன்றுதான் ஓஹையோ - மிக்சிகன் மாநிலங்களுக்குள் கால் வந்தாட்டப் போட்டி அந்நகரில் நடந்தது. அன்று நான் அங்கு வந்ததைப்பற்றி அன்பர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்; நான் பேறு பெற்றவன் என்றும் கூறினர். சில நாட்கள் முன்பே, எனக்காக 10 டாலர் கொடுத்து ஒரு நுழைவுச் சீட்டு வாங்கியிருந்தனர்