210 விளையாட்டுக்காட்சி பிற்பகல் 3 மணிக்கு அப்போட்டியைப் பார்க்கச் சென்றோம். அன்றுபோல் அன்றுபோல் மிகுதியான குளிர் என்றும் இல்லை. பல உடைகளை அணிந்துகொண்டு நண்பர்களை மகிழ்விக்கவே நான் சென்றேன். பல்கலைக்கழக விளையாட்டு அரங்கத்தில் அப்போட்டி நிகழ்ந்தது. ஒரு நூறாயிரம் மக்கள் கூடியிருந்தனர். இதழ்களுக்காகவும் உள்ளக். களிப்புக்காகவும் பலர் போட்டோப்படம் எடுத்தவண்ண மாயிருந்தனர்; திரைப்படக்காரர்களும் சுறுசுறுப்பாயிருங் தனர். அமெரிக்கரின் கால்பந்தாட்டம் 'ரக்பி' எனப்படும். அதற்கும் பிற நாடுகளின் கால் பாந்தாட்டங்களுக்கும் வேறு பாடுகள் உண்டு. இரண்டு சீனர்கள் ஓர் அமெரிக்கக் கால் பந்தாட்டத்தைப் பார்த்த பின்னர், எந்தக் கட்சி வென்றது என்பதைப்பற்றி விவாதித்ததாக அமெரிக்கர் வேடிக்கை யாகப் பேசுவார்கள். கொடி வணக்கம் நாட்டுக்கொடியை ஏற்றிவிட்டு வணக்கப் பாடலைப் பாடிய பின்பே போட்டி தொடங்கியது. தம் நாட்டுக்கொடிக்கு அமெரிக்கர் மிகவும் வணக்கம் செலுத்துவர்; தெருவில் யாரேனும் ஒருவர் நாட்டுக்கொடியைக் கொண்டுபோனால், அவ்வழியிற் செல்வோர் அனைவரும் தலைகுனிந்து, தொப்பி களை எடுத்து வணக்கம் செலுத்துவர். மாணவிகளின் உணவு விடுதி போட்டி முடிவுற்றதும், அருகிலிருந்த பேக்கர் ஹாலுக்குச் சென்றேன். (மாணவிகளின் உணவு விடுதி இருக்கும் அம்மண்டபத்தில், ஆண்டுக்கு நான்கு நாட்களில் தான் ஆடவர் உள்ளே செல்லலாம். போட்டியை முன்னிட்டு அந்நாளும் இந்நாட்களில் ஒன்றாயிருந்தது) அங்கே ஒவ் வொரு மாணவிக்கும் டெலிபோன் இருந்தது; சுகாதா வசதிகள் சிறந்துவிளங்கின; நீராடுவதற்கான அமைப்புக்
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/212
தோற்றம்