களையும் கருவிகளையுங் 211 கண்டு பொறாமைப்பட்டேன்- அமெரிக்கருக்கு நீராடும் அறையே சுவர்க்கம். அவர்கள் நீராடும் அறையில்தான் குடியிருப்பர் என்றுகூடச் சொல்ல லாம். வீடுகட்டும் செலவில் ஒரு பெரும் பகுதியை நீராடும் அறைக்காகவே அமெரிக்கர் செலவிடுவர். பல வீடுகளில், வாழ்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், குளியலறை யுடன் கூடிய கழிவுஅறை - நீரடி அறைகளின் எண்ணிக்கை மிகுதியாக இருக்கும். கடவுள் வழிபாடு வொல்லர்மனின் மறுநாள் ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால், நான் பல்கலைக்கழக வட்டாரத்துக்குச் செல்லவில்லை. என்னை விருந்தினனாக ஏற்றிருந்த குடும்பத்தாருடன் நானும் கிறித்துவக் கோவிலுக்குச் சென்றேன். குழந்தைகட்கான விவிலிய நூல் வகுப்பில் ஆசிரியரின் வேண்டுகோட்கிணங்க. 6, 7 ஆண்டுச் சிறுவருக்கு நான் சில சொற்கள் கூறினேன், அங்கிருந்து வயதுவந்த இளைஞர்கட்கான வழிபாட்டு மண்டபத்துக்குச் சென்றேன். மிஸ்டர் மகன் பிரட்டி என்னை அறிமுகப்படுத்தியவுடன், அங்கும் ஒரு குட்டிச் சொற்பொழிவாற்றினேன். அதன்பின்னர் முதியோருக்கான வழிபாட்டு மண்டபத்துக்கும் சென்றேன். காந்தியடிகளிடம் மிகவும் அன்புடையவர் அங்கிருந்த மதகுரு "காந்தியடிகளின் நாட்டிலிருந்து வந்திருப்பவர்" என்று என்னைப்பற்றித் தம் உரையிற் குறிப்பிட்டார். வழிபாடு முடிந்தவுடன், பலர் என்னிடம் வந்து என் நலத்தை விசாரித்தனர். நாகரிகமாய் உண்ணவும் உறங்கவும் ஆடவும் ஓடவும் பாடவும் புலனார இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்கவும்,. இவற்றிற்கெல்லாம் இன்றியமையாத செல்வத்தை மேன் மேலும் வளர்க்கவும் பொழுது போதாத அமெரிக்கருக்குக் கண்ணுக்கெட்டாத ஒரு கடவுளைப் பற்றிச் சிந்திக்கவும் நேரமிருக்கிறது என்பதை அன்றுதான் நான் உணர்ந்தேன்.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/213
தோற்றம்