213 மொழிப்பயிற்சி போதிய அளவுக்கு இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அவரோடு நான் பேசிக்கொண்டிருந்த போது, பல்கலைக்கழகப் போட்டோப்படப் பகுதியினர் படமெடுத்தனர்; எங்கள் சந்திப்பு மறுநாள் இதழில் வெளியாயிற்று. பாலர் பள்ளி செவ்வாய்க்கிழமையன்று, பாலர் பள்ளிக்கூடத்திற்குச் சென்றேன். இதுவும் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி, இங்கே, பல்கலைக் கழக மாணவிகள் இரண்டு வயதுக் குழந்தைகட்கு அவர்கள் விரும்பியபோது படங்கள் காட்டி கல்வி கற்பித்தனர். மனையியல் கலைப்பகுதி மனையியல் பகுதியில் சலவையாகி வந்துள்ள துணி களைச் சரிபார்க்கும் கருவிகளும், பலவகை உணவுகளைச் சோதனை செய்யும் பொறிகளும் இருந்தன. பொருளாதாரப் பேராசிரியர் சந்திப்பு பொருளாதாரப் பேராசிரியர்களுடன் அன்று பகலுணவு: அருந்தினேன். செவ்வாய்தோறும் அவர்கள் சந்தித்துச் சொற்பொழிவாற்றுதல் மரபாம். நான் அவர்கள் கூட்டத் தில் பேசிப் பெருமிதம் அடைந்தேன். கூட்ட முடிவில் பல பேராசிரியர்கள் தத்தம் அறைகட்கு என்னை அழைத்த னர். பல வினாக்களைப்பற்றித் தனித்தனியே அவர்களோடு விவாதித்தேன். சிலர் தாம் இயற்றிய நூல்களை அன்பளிப் பாய்த் தந்தனர்; அமெரிக்கப் பொருளாதாரத்தை நன்கு அறிய எனக்கு உதவக்கூடிய நூல்களின் பட்டியலும் தந்தனர். வானொலிக் கல்வித்துறைத் தலைவர் சந்திப்பு பின்னர் பல்கலைக்கழக வானொலி நிலையத்தில், வானொலிக் கல்வித்துறைத் தலைவர் வானொலி நிகழ்ச்சியில் என்னைப் பேட்டி கண்டார். இந்தியாவைப் பற்றிய பல
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/215
தோற்றம்