உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 வினாக்களுக்கு விடை கூறினேன். இந்தியா அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் ஏற்றுமதிகளும் ஒன்றுக்கொன்று போட்டியில்லாதவையாயிருப்பதால், பொருளாதாரத் துறை யில் இந்நாடுகள் ஒத்துழைப்பது எளிதென்பதையும், இந்தியா மீது அமெரிக்கா நல்லெண்ண முடையதாயிருப் பதையும், அவர் பேட்டியின் இறுதியில் குறிப்பிட்டார். நூல் நிலையம் நூல் நிலையத்திலும் சிறிதுநேரம் செலவிட்டேன். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் நூல்நிலையம் மிகச் சிறப்புடையது. மிகுதியான மாணவர்கள் தம் நேரத்தை சோதனைக் கூடங்களிலும் நூல் நிலையத்திலுமே கழிப்பர். இரவு 11 மணி வரையில் பல நூல்நிலையங்கள் திறந்திருக்கும். ஆராய்ச்சியாளருக்குத் தனி நூல்நிலையங்களும், பொழுது போக்குப் படிப்புக்குத் தனி நூல்நிலையங்களும், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உள்ளன. ஓஹையோ பல்கலைக்கழக நூல் நிலையத்தில் பத்து லட்சம் நூல்கள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். திரைப்படக்காட்சி பல பல்கலைக்கழகத் திரைப்படக் காட்சித் துறைக்கும் சென்றேன். இங்கே யாவரும் பணம் கொடுக்காமல் விரும்பியபோதெல்லாம் திரைப்படம் பார்க்கலாம். தென் அமெரிக்கப் பயணம், அமெரிக்க வாணிகம், ஐக்கிய நாடு கள் அவை என்ற மூன்று படங்களை ஒரு மணி நேரத்தில் பார்த்தேன். அ மாணவர்களின் உணவு விடுதி அன்றிரவு எனக்கு ஒரு ப்ர்டர்னிடியில் (Farternity- மாணவர்கள் சகோதரத்துவ சபை) விருந்து நடந்தது. அப்பல்கலைக்கழகத்தில் மட்டும் இதுபோன்ற ஆண் மக்கட் குரிய மாணவர் விடுதிகள் 75 உள்ளன. ஒவ்வொன்றுக்கும்