உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 புதன் கிழமையன்று, உடற்பயிற்சிக்கலை பற்றிய சொற் அமர்ந்தேன். ஆசிரியரும். மாணவரும் மிக இனிமையாகப் பழகியதும், மனமுவந்து ஊக்கமாக மாணவர் பாடங்கேட்டதும், ஆசிரியரின் நகைச் சுவையும் என்னைக் கவர்ந்தன. பொழிவு நடந்த வகுப்பில் பார்ட்டல் இன்ஸ்டிடியூட் போட்டோப்பட மற்ற மாணவர்களெல்லாம் அடுத்த வகுப்புக்குச் செல்ல, அப்போது மட்டும் மாணவனாகிய நான் பார்ட்டல் இன்ஸ்டிடியூட்டுக்குப் புறப்பட்டேன். ஆராய்ச்சி, மின்சாரக் கருவிகளைச் சரிபார்க்கும் வேலை, எரி பொருள்கள் பற்றிய ஆராய்ச்சி, வாயு பரிசோதனை, எக்ஸ் கதிர்கள் நிறமாலை, உலோகங்கள் ஆராய்ச்சி, உலோகங்கள், புவியியல் பொருள்களைப் பற்றிய ஆராய்ச்சி, தட்பவெப்ப நிலையைச் சோதிப்பது ஆகியவை இந்த இடத்தில் நடக்கின்றன. தனிப்பட்டவர்களின் பொருளுதவி யால் இது அமைந்துள்ளது. இக்கழகத்தினர் கட்டணம் வாங்கிக் கொண்டு, தொழிற்சாலைகட்கும் வியாபாரிகட்கும். தொண்டு புரிகின்றனர். ஓர் அமெரிக்கரின் பண்பாடு எகிப்தில், கெய்ரோ பல்கலைக்கழகத்தில் ஆலோசகரா யிருந்த ஒரு பெருமகனுடன் அன்றிரவு விருந்துண்டேன். அங்கே குழுமியிருந்த அமெரிக்க நண்பர்கள் நம் உணவை நமது முறைப்படியே தரையில் அமர்ந்து கையாலேயே உட்கொள்ள நேரிட்டது. நான் இருந்த இடத்துக்குத் தம் காரைத் தாமே ஓட்டிக்கொண்டு வந்து அப்பெருமகனார் அவர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். தம் வீட்டில் வண்ண வேலைகளைத் தாமே செய்ததாக அவர் சொன்னார். நண்பர்கட்கும் மாணவர்கட்கும், பேராசிரியத் தோழர்கட்கும் உணவு படைக்கும் வேலையையும் தட்டுக் கழுவும் வேலையை யும் அவரே செய்தார். தம் சமையலறைக்குள் என்னை