உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 காய்கறிகள் முதலிய துணை உணவுப்பொருள்கள், மலர்கள் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிப் பகுதிகளையும் பார்த்தேன். தாவரங்களும் விலங்குகளும் பற்றிய ஆராய்ச்சிக்காக 100 கி.மீ நீளமுள்ள ஏரியும் அங்கே இருக்கிறது. விமான நிலையம் முதலியன பல்கலைக்கழகத்து ஆகாயவிமான நிலையம், வேளாண்மைப் பண்ணைக்கு அணித்தாயுள்ளது. அதன் நிலப்பரப்பு 400 ஏக்கர். ஓஹையோவில்தான் ஆகாய விமானம் கண்டுபிடிக்கப்பட்டதென்பதையும் நாம் நினைவு படுத்திக்கொள்ள பல்கலைக்கழக ஆய்வுக் கூடத்தையும், யிட்டேன். வேண்டும். பொருட்காட்சிச் நம் நாட்டு உணவு சாலையையும் பார்வை அன்றிரவு ஓர் அமெரிக்கர் வீட்டில், பல நண்பர் களுடன் மீண்டும் நம் நாட்டு உணவு அருந்தும் பேறு கிடைத்தது. நம் உணவின் சுவையை யாவரும் பாராட்டினர்; காரம் அதிகமாயிருப்பதாயும், எண்ணெய் சேர்ப்பதால் சீரணிப்பதில்லை என்றும் அமெரிக்கர் என்றும் அமெரிக்கர் சிலர் கருத்துத் தெரிவித்தனர். பிரியாவிடை சனிக்கிழமையன்று, ஹௌ குடும்பத்தார் கொலம்பஸ் நகரம் முழுவதையும் எனக்குக் காட்டினர். மீண்டும் தம் இல்லத்துக்கு நான் வரும் நன்னாளை எதிர்பார்ப்பதாகக் கூறினர். அவர்கள் இல்லத்திலிருந்து விடைபெற்று இரயிலுக்குச் செல்லும் வழியில் தத்துவப் பேராசிரியர் இல்லத்துக்கு வந்தோம். அங்கே, எனக்கு ஒரு பிரிவுபசாரம் நடந்தது. அன்று விருந்துண்ட முப்பதின்மரிற் பெரும்பாலோர் இந்திய மாணவரே. தாம் அனைவரும் நன்றாக நடத்தப்படுவ