உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 தாகவும், பிறருடன் எளிமையாகப் பழகும் இயல்புடை யவர்களுக்கு அமெரிக்க மக்கள் தனித்தனியே பற்பல உதவிகள் செய்து வருவதாகவும் அம்மாணவர்கள் வாயி லாக அறிந்து மகிழ்ந்தேன். முடிவுரை சில நிமிடங்களில் இரயில் நிலையத்துக்குவந்து சேர்ந்தேன்; மிகவும் சுறுசுறுப்பான ஒரு வாரமும் முடிந்து வேலைகளைத் விட்டது. நான் நியூயார்க்கில் விட்டுவந்த தொடர்ந்து செய்ய அந்நகருக்குத் திரும்பலானேன். ஆனாலும்,அப்பல்கலைக்கழகமும், அங்கே எனக்குக் கிடைத்த புதிய நண்பர்குழாமும் என் மனத்தைவிட்டு அகலவில்லை. பல கூட்டங்களைப்பற்றி யான் ஈண்டு விரித்துக் கூறி விருப்பது வியப்பாயிருக்கலாம். அமெரிக்கர்களைப் போலக் கூட்டப்பித்து உடையவர் உலகில் வேறெங்கும் இல்லை. எந்தச் சிறு செயலுக்கும் ஒரு கூட்டம் நடத்துவதும், ஒரு செயற் குழு அமைப்பதும் அமெரிக்கரின் வியத்தகு பண்பு. 28. திருப்தியடையாத அமெரிக்கர் கல்வி டாக்டர் லியான் ஆர்ப், வர்ஜீனியா பாலிட்டெக்னிக் (வி.பி.ஐ.) என்ற இன்ஸ்டிடியூட் நிலையத்தின் இயந்திரப் பொறியியல் பேராசிரியராவார். அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர்; ஆண் குழந்தைகள். ஒரு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடி யாகக் கவனித்தாக வேண்டிய 'கேஸ்'. இம்மாதிரியான நிலைமையைச் சமாளிப்பதற்குத் தேவையான மூச்சுக் கருவி கள் தளவாடங்கள் ஏதும் அங்கு அச்சமயத்தில் இல்லை என்பதை உணர்ந்ததும் பேய் பிடித்தவர்போல் ஆனார். குழந்தை பின்னர் நன்கு குணமாகிவிட்டான்.