220 நம் நட்டில் ஒரு பேராசிரியர் வீட்டில் இத்தகைய நிகழ்ச்சி ஏற்பட்டிருந்தால்........ உடனே செய்தித் தாளில் "ஆசிரியருக்குக் கடிதம் எழுதுவார். அதைத் தொடர்ந்து வேறு சில கடிதங்கள் வெளியிடப்படும். குழந்தை நலமானதும், பேராசிரியர் உட்பட எல்லாத். தந்தையரும் பிரச்சினையை மறந்துவிடுவார்கள். அமெரிக்காவில் நடந்தது என்ன? டாக்டர் ஆர்ப் கவலையிலிருந்து விடுபடவில்லை,ஆனால் வெறுமனே கவலைப்பட்டுக் கொண்டிராமல் செயலில் இறங்கினார்; இம்மாதிரி மூச்சுத் திணறல் ஏற்படும் குழந்தை களுக்கு உடனடியாக உதவி செய்யக் கூடிய இயந்திரம் ஒன்றை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபடலானார்: உருவாக்கிய இயந்திரத்தின் பெயர் 'ஆர்ப் ரெஸ்பிரேட்டர் (மூச்சு விடும் கருவி). ஆனால் இத்துடன் ஆர்ப் திருப்தி அடைந்து விடவில்லை. திருப்தி அடைவது அமெரிக்க இயல்பு அல்ல. சிசு மரண விகிதத்தை மேலும் குறைத்திட ஏதாவது செய்தாக வேண்டும் என அவர் துடித்தார். தமது வினாவுக்குத் தாமே விடை கண்டுவிட்டதாகவும் நம்பினார்: அது ஒரு இயந்திரம்; சிசுவின் குருதியை ஒரு 'கருவி' வழியாக வெளியேற்றித் தூய்மைப்படுத்தி உயிர்ச் சக்தி பெற்ற குருதியை மீண்டும் சிசுவின் உடலுக்குள் செலுத்திவிடும் இயந்திரம் அது. இந்த இயந்திரத்தை உருவாக்க அவருக்கு தேவைப் பட்டது பணம். 'வெஸ்ட்டர்ன் எலக்ட்டிரிக்' என்ற மின்கருவி கள் தயாரிக்கும் நிறுவனம் இவருக்கு ஒரு மானியம் வழங்கி, மூன்று ஆண்டுக் காலம் டாக்டர் ஆர்ப் நடத்தும் ஆராய்ச்சிக்கு உதவி செய்தது. பிறந்த குழந்தைகளின் உயிர்காக்கும் இயந்திரம் அசுரவேகத்தில் உருவாகி வருகிறது.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/222
தோற்றம்