உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221 அமெரிக்கப் பெரு வணிக நிறுவனங்கள் உயர் கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் நிதியும் ஆள் பலமும் தந்து உதவிவரும் நூற்றுக்கணக்கான கம்பெனிகளில் ஒன்று தான் வெஸ்ட்டர்ன் எலக்ட்டிரிக். ஆண்டுதோறும் அமெரிக்க வணிக நிறுவனங் கள் ஏறத்தாழ 421 கோடி டாலர் கல்விக்காக வழங்கு கின்றன. பெரு வணிக நிலையமும், பல்கலைக்கழகமும் ஒன்றை யொன்று சார்ந்திருக்கின்றன; வணிகம், கல்விக்கு அளிக்கும் ஆதரவினால் பெரும் பயன் பெறுகிறது. ஆக, கல்விக்கு பெரு வணிக நிலையங்கள் பணம் கொடுப்பது என்பது, ஒரு வணிக முதலீடு என்றே சொல்லலாம்: வெறும் அறம் செய்யும் விருப்பமல்ல அது. உயர் கல்வியில் வணிக நிறுவனங்கள் தங்களுக்கு அக்கறையுள்ள துறைகளுக்கே ஆதரவு தருகின்றன. தமக்குக் குறிப்பாக அக்கறையுள்ள துறையில் பேராசிரியர் பதவி ஒன்றைக் கல்லூரியில் அமைத்துக் கொடுப்பது, அந்தத் துறையில் அக்கறையைத் தூண்டிவிடும் என்று பல வணிக நிறுவனங்கள் தெரிந்து வைத்திருக்கின்றன. சான்றாக இரசாயனப் பொருள்களை உற்பத்தி செய்யும் அமெரிக்க ஸியானாமிடு கம்பெனி, பிரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் சுற்றுச் சூழ்நிலையியலில் பேராசிரியர் பதவியை ஏற்படுத்தி யிருக்கிறது. வணிக நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் அடிக்கடி சந்திப்பதும் தமக்கு அக்கறையுள்ள துறைகள் குறித்து ஆலோசனை செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. சில வணிக நிறுவனங்கள், கல்லூரிகளுக்குத் தாராள மாக பணம் கொடுத்து உதவுவதுடன் தாம் உற்பத்தி செய்யும் பொருள்களையும், உபரியாக இருக்கும் தளவாடங் களையும் தேவைப்படும் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங் களுக்கும் அவை பயன்படுத்திக் கொள்வதற்கு வழங்கு கின்றன.