223 ת இன்டர்நாஷனல் டெலிஃபோன் அண்டு டெலிகிராஃப் கார்ப்பரேஷன் நிதி வழங்கி அமைக்கப்பட்டுள்ள " ஐ.டி.டி. இன்டர்நாஷனல் ஃபெலோஷிப் புரோகிராம்" என்ற ஸ்காலர்ஷிப் திட்டத்தின்கீழ் 30 அமெரிக்கப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் வெளிநாடுகளில் ஒரு கல்வி ஆண்டு படிக்கலாம்; 30 வெளிநாட்டுப் பட்டதாரி மாணவர்கள் அமெரிக்காவில் வந்து எம்.எஸ்ஸி. பட்டம் பெறப் படிக்கலாம். எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்கும் நிலையும் பிற்பட்ட சாதியார் பட்டியலில் என் சாதி இடம் பெற்றிருக்கிறது என்று பொய்ச் சான்று தயாரிக்க வேண்டிய நிலையும் அமெரிக்காவில் இல்லை. சட்டத்தின் முன்பு அங்கு எல்லோரும் சமம். உழைக்கவும் ஆக்கவும் அமைக்கவும் செய்யவும் சம உரிமை அனைவர்க்கும் உண்டு. 29. குறையும் நிறையும் உற்பத்தி அமெரிக்காவைப் பற்றி இந்த நூல் பாராட்டு இதழாக விளங்குகிறதே, அந்த நாட்டில் குறை ஒன்றும் இல்லையா? என்று வாசகர் சிலர் கேட்பது என் செவிகளில் ஒலிக் கிறது. பணம், பணம் என்று எப்போதும் அமெரிக்கர் அலைகிறார்கள். எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதற்கு ஒரு விலை மதிக்கிறார்கள். அது அவர்களுடன் உடன் பிறந்த நோய். ஆயுதங்களைச் சேகரிப்பதில் அமெரிக்க அரசு அதன் செல்வம் முழுவதையும் செலவிடுகிறது. இவ்வாறு செலவிடும் வணத்தில் பத்தாயிரத்தில் ஒரு பங்கை மட்டும் ஏழை
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/225
தோற்றம்