224 நாடுகளுக்கு வழங்கினால் கூட, உலகத்தின் வறுமை நீங்கி விடும். அமெரிக்காவில் நான் காணும் மூன்றாவது குறை, இயந்திரமயமாக்கப்பட்டிருப்பதாகும். எல்லாம் மனிதனே, இயந்திரமாகிவிட்டான். இதனால் அடுத்த குறை, அமெரிக்கருக்கு மன அமைதி அல்லது திருப்தி என்பது மருந்துக்கும்கூட இல்லை. சந்திர மண்டலத்தை அடைய வேண்டும். அடைந்தாகி விட்டது. ஆனாலும் ஒரு கவலை. இதைவிட உயரமாக அடுத்து எங்கே செல்லுவது என்பதுதான் அந்தக் கவலை. உலகிலேயே பெரிய கட்டிடம் என்று எம்பயர் ஸ்டேட் பில்டிங்கைச் சுட்டிக் காட்டி வந்தனர். அதைவிடப் பெரிதாக யாராவது எங்கேயாவது கட்டிவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. அதனால் WORLD TRADE CENTRE என்ற அதைவிடப் பெரிய கட்டிடமும் கட்டினர். இவ்வாறே உலகில் மிக உயரமான கட்டிடம் அமெரிக்காவில் தான் இருக்கிறது என்ற பெருமைக்காக, ஆண்டுதோறும் முன்னை விட உயரமான கட்டிடத்தைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். எங்கு போய் முடியும் இந்தப் பித்து? நீக்ரோ பிரச்சினை அமெரிக்காவின் தலையாய பிரச்சினை களுள் ஒன்று. சில இராச்சியங்களில் நீக்ரோக்கள் ஏராளமானவர் இருக்கிறார்கள். அவர்கள் வெள்ளை நிறக் குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கும் வாய்ப்பை உண்டாக்கு வதற்காக 100 முதல் 200 கி.மீ. தொலைவிலுள்ள பள்ளி களுக்கு நாள்தோறும் பஸ்களில் அழைத்துச் செல்லப் படுகிறார்கள். இந்தச் செலவை அமெரிக்க மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. நீக்ரோக்கள் பலர் நல்ல செல்வர்களாக உள்ளனர். குறைந்த பட்சச் சம்பளச் சட்டத்தால் நீக்ரோக்களுடைய பொருளாதார நிலை, நன்றாக உள்ளது. பொதுப்பணி
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/226
தோற்றம்