234 முன் வெளியான 800 அரிய தமிழ் நூல்கள் அனுப்பப் பெற்றுள்ளன. எந்த நூலும் திரு. சுப்பிரமணியம் கண்ணி லிருந்து தப்புவதில்லை. தேவையானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அலசி ஆராய்ந்து அனுப்புகிறார். பெரிய அளவில் தமிழ் நூல்கள் இருக்கும் பல்கலைக் கழகங்கள் வருமாறு:- (1) சிக்காகோ - இல்லினாய்ப் பல் கலைக்கழகம், (3) விர்ஜினியா, (3) விஸ்கான்சின், (4) ஹாவாய். (5) வாஷிங்டன். நி யூயார்க் பொது நூலகத்திலும் ஏராளமான தமிழ் நூல்கள் உள்ளன. கன்னடத்தோடு தமிழிலும் புலமை பெற்றுத் தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள டாக்டர் ஏ.கே.ராமானுஜன் என்ற பேராசிரியர் பணிபுரியும் காரணத்தால் சிக்காக்கோவிலுள்ள இல்லினாய்ப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சிகள் நிகழ்கின்றன. பல வெளி யீடுகள் வெளிவருகின்றன. றன. சிறந்த சிறந்த தமிழ் தமிழ் நூலகமும் உள்ளது. பெர்க்ளேயிலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகம் கார்னல், மிக்சிகன், மினிசோட்டா, பென்சில்வேனியா சிரகியூஸ், டெக்சாஸ் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் நூல் கள் (ஓர் அளவு) உள்ளன. ஒவ்வொரு திங்கள் தொறும் புது தில்லி அலுவலகத்தார் THE ACCESSIONS LIST; INDIA என்ற ஓர் அட்டவணையை அச்சிடுகின்றனர். இவர்கள் அமெரிக்காவுக்கு வாங்கி யனுப்பியுள்ள நூல்களைப்பற்றிய முழு விவரங்கள் இப் பட்டியலில் கொடுக்கப்படுகின்றன. இந்தப் பட்டியலைப் பார்த்து, வேறு சில நாடுகள் தங்களுக்குத் தேவையான நூல்களை வாங்குகின்றன.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/236
தோற்றம்