உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே: தாங்கள் தான் 237 அமெரிக்காவில் பிள்ளையார் கோயில் கட்டி வருகிறீர்களா? பதில்: ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தித் திட்டத் துணை அதிகாரி (Dy. Administrator, U. N. D. P. and Chief - De - Cabinet to Secretary - General) சி. வி. நரசிம்மன் அவர்கள் தலைவர். நான் செயலாளர். முயற்சி களை ஒரு குழு செய்கிறது. அதில் ஒத்துழைப்பவர்களில் நான் ஒருவன். பிள்ளையார் கோயில் மட்டும் அல்ல, இந்துக் களுக்காக ஒரு வழிபாட்டுக் வழிபாட்டுக் கூடத்தையும் உருவாக்கு கிறோம். கே: இந்த வேலையாகத்தான் இந்தியாவுக்கு வந்திருக் கிறீர்களா? அல்லது ஐ.நா,நீர்வளப் பகுதி வேலையாகவா? பதில்: உலகெங்கும் நீர்வளத்தைப் பெருக்குவது எங் கள் வேலை. சிக்கனமாகத் தண்ணீரை உபயோகப்படுத்த உதவுவதும் எங்கள் குறிக்கோள். நீர்வள நிபுணர்களின் ஆற்றலும் அறிவும் எல்லா நாடுகளுக்கும் பயன்பட நாங்கள் உதவுகிறோம். இத்தகைய வேலைகளுக்கு ஐ.நா.வளர்ச்சித் திட்ட அமைப்பு 300 மிலியன் டாலர் (250 கோடி ரூபாய்) செலவிட்டிருக்கிறது. இதில் 90 மிவியன் டாலர் ஐ.நா. மூலம் செலவாகிறது. வெள்ளம், புயல் காற்று, பாலைவனம் ஆகியவற்றால் நீர்வளம் பாதிக்கப்படுவதைப் பற்றிப் பல நாட்டு அறிஞர்களின் கருத்தரங்கு ஒன்றை டில்லியில் ஏற் பாடு செய்திருந்தோம். அதற்காக இந்தியாவுக்கு வரும் வழியில் துருக்கியின் தலைநகரான இஸ்டான்புல்லை அடைந் ததும், இந்தியா-பாக் போர் மூண்டுவிட்டது. இந்தியாவுக்கு விமானங்கள் போகாது என்று அறிவித் தார்கள். பீருட் வந்து, ஏர் இந்தியா விமானத்தில் எப்படியோ வந்து சேர்ந்தேன். கருத்தரங்கை ஒத்திப் போட்டு நான்கு நாட்களுக்கு முன் தந்தி கொடுத்து விட் டோம் என்று சொன்னார்கள். தந்தி கிடைக்கு முன்னரே