236 பேராசிரியர்கள் ஆவர். இவர்களில் பலர் அமெரிக்காவுக்கு மாணவர்களாக வந்தவர்களே. பின்னர் அமெரிக்காவையே தங்கள் தாயகமாகக் கொண்டு அங்கேயே நிலைத்து விட்டனர். அமெரிக்காவில் உள்ள நூற்றுக்கணக்கான கல்லூரி கள் ஒவ்வொன்றிலும் குறைந்தது ஒரு சில இந்தியர்களாவது பேராசிரியர்களாக இருக்கின்றனர். சான் ஃபிரான்ஸிஸ்கோப் பகுதியில் 1970-ஆம் ஆண்டில் தான் இந்தியர்களும் அவர்களின் குடும்பங்களும் வந்து குடியேறினர். சான் ஃபிரான்ஸிஸ்கோ, குடாப் பகுதியின் தென் மேற்குக் கடற்கரையோரம் நெடுக எலெக்ட்ரானிக் ஸெமிகண்டக்டர் கருவிகள் தயாரிப்புத் தொழில் பெருகியது தான் இதற்குக் காரணம். பொறியியல் அறிவியல் பட்டங் கள், தகுதிகள் உடைய இந்தியர் பலரை இந்தத் தொழில் கவர்ந்து இருந்தது. இந்தியர்கள் வாழும் பிற இடங்களில் உள்ளதைப் போலவே ஸான் ஃபிரான்ஸிஸ்கோ குடாப் பகுதியிலும், மொழி, மாநிலம் அடிப்படையில் இந்தியர்கள் தனித் தனி யாக வெவ்வேறு விழாக்களை நடத்துகின்றனர். ஆக ஒவ்வொரு மாதத்தில் ஒவ்வொரு குழுவினரும் பல வகை நிகழ்ச்சிகளில் தத்தம் மாநில மரபுக்குரிய உணவு, இசை, நாடகம், நடனம் முதலியவற்றை சுவைக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இந்நிகழ்ச்சிகள் இந்தியர்களின் குழந்தை களுக்கு அவரவர்களின் மரபினை அறிமுகம் செய்து வைக்கவும் உதவுகின்றன. 34. அமெரிக்காவில் பிள்ளையார் கோயில் சென்னை அண்ணா நகரில் ஒரு வீடு. டாக்டர் அழகப்பன், எம்.ஏ., எம்.எஸ்ஸி எக்னாமிக்ஸ்(லண்டன்), பிஎச்.டி. பாரிஸ்டர் - அட் லா என்ற பெயர்ப்பலகை தொங்குகிறது. அவரை பேட்டி காணுகிறேன்.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/238
தோற்றம்