உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241 சிவன் கோயில் அமெரிக்காவில் ஏற்பட்ட முதல் சிவன் கோயில் என்று சொல்லத்தக்கது, சான்பிரான்சிஸ்கோவில் சைவ சித்தாந்த மடத்தில் 1957-இல் ஏற்பட்டது. இதை நிறுவியவர் சுவாமி சிவசுப்பிரமணியம் என்ற அமெரிக்கர். இவர் செய்துவரும் சைவசமயப் பணிகள் ஏராளம். நியூயார்க்கில் அமைந்துள்ள பிள்ளையார் கோயிலுக்கு அருகே இவர் இரண்டு வீடுகளை வாங்கி அவற்றில் அமெரிக்கத் துறவிகள் சிலரை இருக்கச் செய்துள்ளார். அந்தத்துறவிகள் அன்றாடக் கூலி வேலை பார்த்து, தங்கள் செலவுக்குப் பொருளீட்டிக்கொள்ள வேண்டும். அதோடு பிள்ளையார் கோயிலைச் சுத்தம் செய்து உழவாரப் பணியையும் அவர்கள் செய்து வருகிறார்கள். சுவாமி சிவசுப்பிரமணியம் நெவாடா மாநிலத்தில் ஓர் அச்சகம் நடத்தி வருகிறார். அந்த இடத்துக்கு ஸ்கந்தமலை என்று பெயர். டாக்டர் பா.நடராசன் அவர்களைக்கொண்டு சுவாமி சிவசுப்பிரமணியம் திருமந்திரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருகிறார். தென் இந்தியாவில் சைவ சமயத்தைப் பரப்ப ஒரு திட்டம் போட்டிருக்கும் சுவாமி சிவசுப்பிரமணியம் அதற்காக நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் ஓர் அலுவலகம் தொடங்க உள்ளார். ஹவாய்த் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த காவாய் என்னும் தீவில் இவர் ஒரு சிவன் கோயில் கட்டி வருகிறார். மீனாட்சி அம்மன் கோயில் கூ டெக்சாஸ் இராச்சியத்து ஹூஸ்டனில் மீனாட்சியம்மன் கோயில் கட்ட ஏற்பாடு நடை டைபெற்று வருகிறது. இதுவும் முயற்சியே ஆகும். அமெரிக்காவிலுள்ள இந்தியர்களின் தமிழ்நாடு அரசும் மதுரை மக்களும் இம் முயற்சிக்கு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.