242 35. அமெரிக்காவில் தமிழ் உலகில் வழங்கும் பல் மொழிகளையும் அமெரிக்கர் ஒரு சிலராவது கற்று வருகின்றனர். அவர்களுக்கு எந்த மொழி மீதும் வெறுப்புக் கிடையாது. மொழிகளை எளிதாகப் பயிலுவதற்காக மொழியியல் என்ற ஒரு துறையை அமெரிக்கர் வகுத்து இதை இந்தியாவிலும் பரப்பியுள்ளனர். தென்னிந்திய மொழிகளுக்கான திராவிட மொழியியல் உயர் ஆராய்ச்சிக் கூடத்தை, இந்தியப் பல்கலைக்கழகங்களின் மானியக் குழு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1957-இல் நிறுவியது. கேரளப் பல்கலைக்கழகத் தில் திராவிட மொழியியல் மன்றம் ஏற்பட்டு மிகச் செம்மை யான முறையில் ஆராய்ச்சிப் பணி புரிந்து வருகிறது. தமிழ் பயில விரும்பும் அமெரிக்கர்களுக்கு மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், சில வசதிகளைச் செய்துள்ளது. சென்னை அடையாற்றிலுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் திலும் இத்தகைய ஏற்பாடு உண்டு. அமெரிக்காவில் தமிழ்க் கல்வியும் தமிழ் ஆய்வும் நிகழும் இடங்கள் ஆவன :- எண். இராச்சியம் நகர் பல்கலைக்கழகத்தின் பெயர் 1.இல்லினாய் சிக்காகோ சிக்காகோ பல்கலைக்கழகம் 2. பென்சில்வேனியா ஃபிலடெல்ஃபியா பென்சில்வேனியா பல்கலைக்கழகம் 3. கலிபோர்னியா பெர்கிளி கலிஃபோர்னியா பல்கலைக் கழகம் 4.சீட்டில் வாஷிங்டன் வாஷிங்டன் பல்கலைக்கழகம் 5. ஹாவாய் ஹோனலூலு ஹாவாய்ப் பல்கலைக்கழகம் 6. டெக்சாஸ் ஆஸ்டின் டெக்சாஸ் பல்கலைக்கழகம் அமெரிக்காவிலுள்ள அறிஞர்களில் திராவிட இயலிலும் தமிழ் மொழியிலும் புலமை உள்ளவர்கள் இருக்கிறார்கள்.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/244
தோற்றம்