243 அவர்களில் கீழ்க் கண்டவர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவர் டாக்டர் எமினோ [திராவிட ஒப்பியல் மொழி நூலின் கூட்டாசிரியர்] டாக்டர் இர்ஷிக் [தமிழ்நாட்டு அரசியல் நிலைபற்றிய நூலாசிரியர்] டாக்டர் ஏ.கே. இராமானுஜம் டாக்டர் ஷிஃப்மன் டாக்டர் லிண்ட்ஹோம் டாக்டர் ஷோபர்க் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் இவர்களில் சிலர் கோலாலம்பூர், சென்னை, பாரிஸ் நகர்களில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் கலந்து, கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளனர். சிக்காகோ, நியூயார்க் ஆகிய இரு நகர்களிலும் தமிழ்ச் சங்கங்கள் உள்ளன. நியூயார்க் தமிழ்ச் சங்கத்தார் 1972 இல் உலகத் தமிழ் மாநாட்டை அமெரிக்காவில் நடத்த முன் வந்தனர். ஆனால் அன்றைய தமிழக அரசு அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சீட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக நூலகத் தில் ஏறத்தாழ 2500 தமிழ் நூல்கள் உள்ளன. இங்கு வரும் தமிழ் வார மாத இதழ்கள் 70: நாளிதழ்கள் 2. இவ்வாறே சிக்காகோ முதலிய பிற இடங்களிலும் தமிழ் நூல்களும் வார மாத இதழ்களும் இடம்பெற்றுள்ளன. 36. பாரதியும் அமெரிக்காவும் அடிமைத் தளை அறுத்த அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆப்ரஹாம் லிங்கன் தமது புகழ்பெற்றகெட்டிஸ்பர்க் உரையில் ஜனநாயகம் என்பது "மக்களுடைய ஆட்சி, மக்களுக்காக, மக்களால்" என்று இலக்கணம் வகுத்தார்.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/245
Appearance