244 கவியரசர் சுப்பிரமணிய பாரதியார், தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய காலத்தில், லிங்கனது இந்த உயர் கொள்கை அவரைக் கவர்ந்தது. அமெரிக்கக் குடி யரசின் அடிப்படைக் கொள்கைகளிலும், நீக்ரோ அடிமை களின் தளைகளை நீக்குவதற்காக ஆபிரகாம் லிங்கன் மேற் கொண்ட முயற்சிகளிலும் கவியரசர் ஈடுபாடு கொண்டார் என்றும் கூறலாம். மக்கள் ஆட்சி பற்றி லிங்கன் கூறிய கருத்தே பாரதியாரது 'புதிய ரஷ்யா' என்ற பாடலில் தொனிக் கிறது: "குடி மக்கள் சொன்னபடி குடிவாழ்வு மேன்மையுறக் குடிமை நீதி கடியொன்றி லெழுந்ததுபார்; குடியர சென்று உலகறியக் கூறி விட்டார்; அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது அடிமையில்லை அறிக என்றார். இடிபட்ட சுவர் போலக் கலிவிழுந்தான் கிருத யுகம் எழுக மாதோ!" என்பது அமெரிக்கக் குடியரசின் அடிப்படைக் கொள்கைகளை மட்டுமின்றி, அந்நாட்டைப் பற்றிய இதர நுணுக்கமான விவரங்களையும் பாரதியார் அறிந்திருந்தார் பாரதியாரின் மற்றொரு பாடலின் மூலம் தெளிவாகிறது. உலகின் சுற்றளவு 40,000 கி மீ. அமெரிக்காவின் நடுப் பகுதிக்கும் இந்தியாவின் நடுப்பகுதிக்கும் இடையே உள்ள தொலைவு ஏறத்தாழ 20,000 கி. மீ. கிழக்கு வழியே சென்றா லும் மேற்கு வழியே சென்றாலும் தூரம் ஒன்றுதான். நம் நாட்டில் பகல் 12 மணியாக இருக்கும்போது, அமெரிக்காவில் அட்லாண்டிக் கடற்கரை ஓரமாக உள்ள பல அமெரிக்க மாநிலங்களில் இரவு ஒன்றரை மணியாக இருக்கும். 5,000 கி.மீ. அகலமுள்ள அமெரிக்க நாட்டில் அப்போது ஓர் இடத்தில் கூட சூரியனுடைய ஒளி வீசாது.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/246
Appearance