உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245 அமெரிக்க நாட்டில் இந்தியாவின் உயர் தத்துவங்களை பரப்பச் சென்றார், சுவாமி விவேகானந்தரின் சீடரான அபேதானந்தா. இதைப்பாரதியார் பின்வருமாறுபாடுகிறார்: 66 ....புவியின் அப்புறத் திருந்து நண் பகலில் பரிதியி னொளியும் சென்றிடா நாட்டில் மெய்யொளி பரப்பிடச் சென்றோன்" பாரதி வெறும் புலவன் மட்டும் அல்லன். பல நாடுகளின் தத்துவங்களை மட்டுமின்றி அவற்றின் நுட்பமான இயற்கை முதலிய தன்மைகளையும் கூர்ந்து கவனித்து அறிந்திருந்த அறிஞன் - உலக அமைப்பை உணர்ந்து உலக உணர்ச்சி களை நுணுக்கமாக அறிந்திருந்த மாமேதை அவன். 37. தமிழ் நாட்டைப் பற்றி அமெரிக்கர் ஆராய்ச்சி அமெரிக்கர் சிலர் தமிழ்நாட்டைப் பற்றிய பலவகையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டு மக்களின் அரசியல், பொருளாதார, சமூக வரலாறுகளை ஆய்வதில் அமெரிக்கர் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். அரசியல் துறையில் கட்சிகளின் வளர்ச்சியைப் பற்றியும் அவற்றின் கொள்கைகளைப் பற்றியும் தேர்தல்களில் சாதிகளின் செல்வாக்கைப் பற்றியும், பொருளாதாரத் துறையில் பழந் தமிழர்களின் தொழில் குறித்தும் கடல்கடந்த தமிழர் நிலை குறித்தும் அரிய விவரங்களை அமெரிக்கர் திரட்டியுள்ளனர். சமூக இயல், பழங்குடி மக்களின் வரலாறு போன்ற துறைகளை நம் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் 1970-க்கு முன் அவ்வளவாக ஊக்குவிக்கவில்லை. அமெரிக்காவில் இத் துறைகள் மிகவும் சிறந்து விளங்குகின்றன. பல நூற்றாண்டு களாக இத்துறையில் ஏற்றம் பெற்றுள்ள பிரான்சு முதலிய நாடுகளும் வியந்து மூக்கின்மேல் விரல் வைத்துப் பெரு