உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 மூச்சுவிடும் வண்ணம் சமூக இயல், பழங்குடி மக்களின் ஆராய்ச்சி முறைகளைப் புதுக்கியும் பெருக்கியும் தனித்த கல்வித் துறையாக அமெரிக்கர் வளர்த்துள்ளனர். இவற்றுக் கெனச் சீரிய படிப்புக்களை வகுத்துள்ளனர். இவை குறித்து ஒப்புயர்வற்ற ஆராய்ச்சி ஏடுகளும் வெளியிடுகின்றனர். ஒரு நாட்டு மக்களை நன்குணர, செல்வாக்குள்ள சிறுசிறு கூட்டங்களைப் பற்றிய தெளிவான அறிவு இன்றியமையாதது என்று அவர்கள் கருதுகின்றனர். அரசியலில் பேரிடம் பெற்றே, புகழுடன் இருந்தோவரும் இருந்தோவரும் தமிழ்நாட்டுச் தொன்றுதொட்டுப் சமூகங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கர் பலர் முனைந்துள்ளனர். ஆராய்ச்சியை மேற்கொள்பவர் முதலில் சில விவரங் களை மேற்போக்காகத் தெரிந்துகொண்டு பெரும்பேராசிரியர் களுடன் கலந்து பேசி ஆராய்ச்சித் திட்டத்தை வகுக்கின் றனர். பெரும்பாலும் கணவனும் மனைவியுமாக ஆராய்ச்சி யில் ஈடுபடுகின்றனர். தமிழ் படித்தவளை மணந்துகொள்ளு கின்றனர் அல்லது கூடுமானால், மணந்த பிறகு அவளைத் தமிழ் பயிலச் செய்கின்றனர். இவர்கட்கு உரிய செலவுகள் இவ்வளவு என்று பெரும்பேராசிரியர்களால் வரையறுக்கப் பட்டதும், அமெரிக்கப் பெரு வள்ளல்கள் நிறுவியுள்ள அறக் கட்டளைகள் அவற்றை ஏற்றுக்கொள்ளுகின்றன. அவர்களுடைய செயல்முறையில் அடுத்த கட்டம் நூற்றுக் கணக்கான நூலக அட்டைகளை வாங்கிக்கொள்வதாகும். குறிப்பிட்ட ஆராய்ச்சிக்கு உதவக்கூடிய நூல்கள், கட்டுரை கள் ஆகிய ஒவ்வொன்றையும் தனித்தனி அட்டையில் குறித்துக் கொள்வர். நூலின் பெயரை எழுதிக்கொள்வது எப்படி? கட்டுரையின் தலைப்பை எழுதிவைத்துக் கொள்வது எங்ஙனம்? என்பவற்றுக்கெல்லாம் குறியீடுகள், விதிமுறை கள், மரபுகள், வரலாறுகள், தொழில் தந்திரங்கள் உண்டு. குறிப்பிட்ட நூல் எந்த மொழியில் உள்ளது, அது எந்த நூலகத்தில் கிடைக்கும் என்பதையும் அதில் குறித்துக் கொள்வர்.