உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247 உண்மையான விவரங்களை வெளியிடுவதே அவர்களு டைய குறிக்கோள்; யாரையும் உயர்த்துவதும் தாழ்த்து வதும் நோக்கம் அன்று. தனித்த செல்வர்களைப் பற்றிய புகழாரமாக நம் நாட்டில் சமூக இயல் வரலாறுகள் என்ற பெயரில் வெளியிடுவது போன்ற நூல்களை அவர் களிடமிருந்து எதிர்பார்க்க இயலாது. அவ்வகையில் அரசர்கள், அமைச்சர், குறுநில மன்னர்கள், அரசியல் தலைவர்கள், செல்வர்கள்மீது கோவையும் உலாவும் பாடுவ தாக அமையும் சமூக வரலாறுகளை அவர்கள் மதிப்பதும் இல்லை. அவை யாரால் எவ்வாறு எத்தகைய சூழ்நிலையில் எதற்காக வெளியிடப்படுகின்றன என்பதை நம்மைவிட அவர்கள் நன்றாக அறிந்துவைத்திருக்கின்றனர். ஒவ்வொரு சமூகத்தையும் பற்றி மறைவாகவும், நாடக மேடைகளிலும் பெருவழக்காக இன்று வழங்கும் பூசற்கதை கள், கட்டுக்கதைகள், போலிக்கதைகள், கற்பனைக் கதைகள், ஆகிய சம்பிரதாயமான வரலாறுகள், செவிவழிச் செய்திகள் ஆ வற்றை அமெரிக்கர் தொகுக்கின்றனர். அவற்றுள் புனைந் துரை எவ்வளவு? எந்த அளவுக்கு அவை பிற சமூகத்தார் களைப் பற்றிய கதைகளுக்குப் பொருந்துகின்றன அல்லது முரண்படுகின்றன என்பதை ஆய்ந்து சீர்தூக்கிப் பார்க் கின்றனர். செய்திகள் சேகரிக்க அவர்கள் பல்வேறு வகையினரை யும் கண்டு பேசுகின்றனர். சிறப்பாக வயது முதிர்ந்தவர் களைச் சந்திக்கிறார்கள். அவ்வாறு நிகழும் பேட்டிகளில் அமெரிக்கர் கையாளும் தந்திரங்கள் பல. தாளோ எழுது கருவியோ பயன்படுத்தமாட்டார்கள். அவற்றைக் கண்டால் நம்மவர்கள் எதையும் சொல்லத் தயங்குகின்றனர் அல்லவா? ஏதோ பொறுப்பில்லாமல் பேசுவது போல உரையாடு வதும், பேசிமுடிந்தபின் நேரே தம் அறைக்குச் சென்று, பேட்டியில் காதில் விழுந்த ஒவ்வொரு சொல்லையும் ஒலிப் பதிவு செய்ததுபோல குறித்துவைத்துக் கொள்வதும் அமெரிக்கர் மரபு. இவ்வாறு பலரிடம் தகவல்களைத் திரட்டிய பின்னர்,