உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்னும் குறளின்படி, அலசி ஆராய்ந்து முடிவுக்கு வருகின் றனர். சில குறிப்பிட்ட கேள்விகளை எழுதிவைத்துக்கொண்டு அந்தப் பட்டியலைப் பலரிடமும் காண்பித்து விடை கோரு கின்றனர். கேள்விப் பட்டியலை உருவாக்குவது எப்படி? அவற்றை எவ்வாறு தொகுப்பது, முறைப்படுத்துவது எவ்வாறு? என்பதைப் பற்றியும் அமெரிக்காவில் இரு தலை முறைகளாகப் பலவாறாக ஆராய்ச்சி செய்துள்ளனர். இதற்கு முன் ஏனைய ஆராய்ச்சியாளர்கள் அமைத்துக்கொண்ட கேள்விப் பட்டியல்களின் அடிப்படையிலும், அவர்களைக் கலந்தும், புதிய ஆராய்ச்சியாளர் தம் ஆராய்ச்சியின் தேவைக்கேற்ப மாறுதல்கள் செய்து கேள்விப் பட்டியலை முடிவு செய்கிறார். கேள்விப்பட்டியலை எத்துணைப் பேரிடம் வழங்குவது, அவர்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்ப தற்கும் சிலமுறைகளையும் கொள்கைகளையும் பின்பற்று கின்றனர். L ஆராய்ச்சியில் எந்தச் செய்தியைச் சொன்னாலும் அவ் விவரம் இன்னார் வாயிலாகத் தெரிந்தது, இன்ன நூலிலிருந்து எடுக்கப்பெற்றது என்று குறிப்புக் கொடுப்பார்கள். இத்தகைய மேற்கோள்களை விரிவாகவும் விளக்கமாகவும் தெரிவிப்பதையே தங்களுடைய இன்றியமையாக் கடமையாகக் கொள்கின்றனர். நூற் பட்டியலும் கொடுக்கின்றனர். இவ்வாறெல்லாம் விவரங்கள் சேர்ப்பதால் ஆராய்ச்சி யின் காலம் முதலில் திட்டமிட்டதைவிட ஓரிரு ஆண்டுகள் கூடுதலாக ஆனாலும் அதற்காக அவர்கள் கவலைப் படுவதில்லை. குறிப்பிட்ட கால அளவை எப்படியாவது கடத்திவிடும், 'கூத்தாடி கிழக்கே பார்ப்பான், கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்' என்ற மனப்போக்கு அவர்களிடம்