250 பல இடங்களையும் சுற்றிப் பார்க்கின்றனர். பல நூறு பேருக்குக் கடிதம் எழுதுகின்றனர். கல்வெட்டுக்கள், ஏட்டுச் சுவடிகள், நாட்டுப்பாடல்கள், கட்டுரைகள், பழைய இலக்கியங்கள், புதிய நூல்கள் ஆகியவற்றையும் ஆய் கின்றனர். அவ்வப்போது ஏற்பட்ட சமய மாற்றங்களிலும் அரசியல் தடுமாற்றங்களிலும் அச்சமூகத்தார் எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றனர் என்பதை அரசாங்க ஆவணக் கருவூலத்திலுள்ள பிடிபாடுகளிலிருந்து விளக்குகின்றனர்; அவ்வச் சமூகத்தைப்பற்றி நீதிமன்றங்களில் நடந்த வழக்கு களிலிருந்து பல விவரங்களைத் துருவிக் கண்டுபிடிக் கின்றனர். தம் ஆராய்ச்சியின்போது வேறு ஒரு துறையைப் பற்றிப் பயனுள்ள விவரம் கிடைத்தால் உடனே அதைத் தம் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவிக்கும் கடமை உணர்ச்சி யும், அமெரிக்கரிடம் இருக்கிறது. இறுதியாக அவர்கள் ஆராய்ச்சியை எழுதும் முன்னர் அமெரிக்காவில் அறிஞர் மன்றங்களில் தக்கார் முன்னிலை யில் தம் கட்டுரையைப் படிக்கின்றனர். அக்கூட்டங்களில் பிறக்கும் கேள்விக் கணைகளுக்கும் விடை அமையுமாறு முடிவான ஆராய்ச்சி வெளிவருகிறது. சொற்செட்டும்,கருத்து வளமும் இருப்பது அவர் தம் நூற்சிறப்பு. "வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்கோர் சயங்கொண்டான் ; விருத்த மென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் ; கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன்; கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள் ; வசைபாடக் காளமேகம் ; பண்பாக உயர்சந்தம் படிக்காசு அலாதொருவர் பகரொணாதே" பாடலில் இடைச்செருகலாக ஆராய்ச்சிக்கு அமெரிக்கர் என்று சேர்த்துக்கொள்ளலாம் எனத் தோன்று என்ற கிறது.
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/252
தோற்றம்