உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251 38 ஓர் அமெரிக்கக் குடும்பத்துடன் ஒரு நாள் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் தன் குடும்பத்துடன் சென்னையில் சில திங்கள்கள் தங்கி இருந்தார். அவர் களுடன் யானும் சில நாட்களைக் கழிக்கலாம் என்று சொல்லி என்னை அன்புடன் அழைத்தார். அதன் விளைவாக எவ்வளவோ அனுபவங்கள் ஏற்பட்டன. நண்பரின் பெயர் பிலிப் சீகல்மன். அவர் அரசியல் சாத்திரப் பேராசிரியர். கடல்கடந்த தமிழர்களைப்பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக நம் நாட்டிற்கு வந்திருக்கிறார். ஏழு ஆண்டுகளாக இதைப்பற்றிப் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் வந்திருக்கிறார். அவருக்கு வயது 36. மதத்தால், யூதர். செய்கின்றனர். பேராசிரியர் சீகல்மன் வேலைபார்க்கும் இடம் மினி சோட்டா பல்கலைக்கழகம். அது அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். ஆண்டு தோறும் அந்தப் பல்கலைக்கழகத்தினர் நாற்பது கோடி ரூபாய் செலவு (இந்தியாவில் உள்ள எல்லாப் பல்கலைக் கழகங்களுக்கும் ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்ட காலம் முழுமைக்கும் ஒதுக்கப்பட்ட தொகை 76 கோடி ரூபாய்) மினிசோட்டா பல்கலைக்கழகம் தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பற்றிய அறிவைப் புகட்டுவதிலும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதிலும் அக்கறையும் ஆர்வமும் காட்டி வருகிறது. சீகல்மனுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அவர் மனைவி பெயர் எல்லன். சுருக்கமாக 'எல்' என்று மனைவியை அழைப்பார். மனைவி, கணவன் பிலிப்பை "பில்" என்று பயணக்கட்டுரை எழுதுவதிலும் எல்லுக்கு நல்ல பயிற்சி உண்டு, பான் அமெரிக்க விமானக் கம்பெனி கூப்பிடுவார்.