உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 யின் வெளியீடான 'கிளிப்பர்' என்னும் திங்களிதழில் அவள் துணை ஆசிரியராக இருக்கிறாள். பியானோ இசைப் பதில் அவளுக்கு ஈடுபாடு உண்டு. இந்தியாவில் மலேரியா ஒழிப்புப் பிரசாரத்திற்காகச் சில கட்டுரைகள் வரைகிறார். குழந்தைகளுக்கு ஒலிபரப்புவதிலும் பல்கலைக்கழகச் செய்தி இதழைப் பதிப்பிப்பதிலும் அவள் திறமைமிக்கவள். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஏழு வயதுள்ள பீட்டரும், நான்கு வயதுள்ள ஸ்டீவும் சென்னையில் படித்து வருகிறார்கள். ஸ்டீவ் தமிழ் மொழி யும் கற்று வருகிறான். அவனுடைய தந்தையார், டாக்டர் பிலிப் சீகல்மன், வீட்டிலேயே நாள்தோறும் ஒரு மணி நேரம் தமிழ் படிக்கிறார். அவருக்குச் சீனமொழி நன்றாகத் தெரியும். சியாங் கே ஷேக் ஆட்சி நடந்த போது மஞ்சூரி யாவில் அவர் ஈராண்டுக்காலம் வாழ்ந்தார். சீனப் படையைப் பற்றிய விவரங்களைச் சேகரித்தார் என்பர். இவர்கள் சென்னையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சென்னையில் சம்பளங் களும் விலைவாசிகளும் அமெரிக்காவை ஒப்பிடும்போது மிக மிகக் குறைவாக இருப்பதாயும், ஆனால் வீட்டு வாட டகையில் மட்டும் சென்னை அமெரிக்காவை எட்டிப் பிடித்துவிடுகிறது என்றும் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். இதே வாடகைக்கு அமெரிக்காவில் வீடு அமர்த்திக் கொண்டால் அந்த வீட்டில் குழாயில் வென்னீர் கிடைக்கும். மட்டத்துக்குக் கீழே கொல்லுப்பட்டறை, தச்சுப்பட்டறை முதலியன உள்ள ஒரு வேலைக் கூடமும் இருக்கும். தரை இந்தியாவில் அவர்களுக்குக் கவலை தருவன மூன்று: 1.சைக்கிள், ஸ்கூட்டர் முதலியன திருட்டுப் போவதால் வீட்டைப் பூட்டிக்கொண்டு படுக்க வேண்டியிருக்கிறது. 2. வெறிநாய்கள் தெருக்களில் சுதந்திரமாகத் திரிகின்றன. 3. பிச்சைக்காரர்கள் தொந்தரவு மிகுதியாக இருக்கிறது. மக்களுடைய ஏழ்மையை நினைக்க நினைக்க அவர்களுக்குப்