உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 புதுமாதிரியாக அமெரிக்காவில் கொடுக்கிறார்கள். அதன் பெயர் 'கான்டாக்ட் லென்ஸ்'. அதன் விலை 100 டாலர், அல்லது 900 ரூபாய், குளித்தவுடன் அதைக் கண்ணின் கருவிழியில் ஒட்டிக்கொள்வாள். வேண்டாதபோது எடுத்து விடுவாள். பார்ப்பவர்களுக்கு அது கருவிழியாகத்தான் தெரியும். கண்ணாடியாகத் தெரியாது. அமெரிக்கப் பெண்களிடம் 'கான்டாக்ட் லென்ஸ்' மிகவும் பரவி வருகிற தாம். எல், ஓர் அமெரிக்க இதழுக்குத் துணை ஆசிரியராக இருக்கிறார் என்பதை முன்னரே சொல்லியிருக்கிறேன். "சென்னையில் இருந்துகொண்டு அமெரிக்காவிலிருந்து வெளி வரும் இதழுக்குத் துணை ஆசிரியராக இருப்பது எப்படி? ராவுத்தர் தெற்கேயும் குதிரை வடக்கேயும் என்பதுபோல் இருக்கிறதே? எப்படி உங்கள் கடமையைச் செய்கிறீர்கள்? எவ்வாறு சம்பளம் கொடுக்கிறார்கள்?" என்று கேட்டேன். அதற்கு எல், பின்வருமாறு மறுமொழி கூறினாள்: "துணை ஆசிரியராகப் பலர் உள்ளனர். எல்லோரும் அந்த இதழின் அலுவலகத்திலேயே உட்கார்ந்து முழுநேரப் பணி செய்ய வேண்டுவதில்லை. அவ்வளவு வேலை இராது. முழு நேரச் சம்பளம் கொடுக்க இதழுக்கும் கட்டுபடியாகாது. அந்த இதழுக்கு வரும் கட்டுரைகள் முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து எனக்கு அவ்வப்போது அனுப்புவார்கள். நான் படித்துப் பார்த்து சிலவற்றைப் புறக்கணித்துவிடு வேன். ஒரு சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, தக்க தலைப்புகள் கொடுத்து ஓரிரு பகுதிகளை நீக்கிவிட்டு, ஏனைய பகுதிகளைத் திருத்தி எழுதி, முன்னுரை முடிவுரையுடன் அந்த இதழ் அலுவலகத்திற்கு அனுப்புவேன். . "ஒவ்வொரு தடவை அனுப்பும்போது எத்தனை மணி நேரம் அவர்களுக்காக வேலை செய்திருக்கிறேன் என்று தெரிவித்துவிடுவேன். ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு டாலர் என்ற கணக்கில் செக் அனுப்பி விடுவார்கள்.'