257 செவ்வாய்க் கிழமைகளில் சீகல்மன் குடும்பத்தார் யோகாப்பியாச ஆசிரியர் வீட்டுக்குப் போய் பயிற்சி செய் கின்றனர். சில நாட்கள் நூல் நிலையங்களுக்குப் போவார் கள். சென்னையில் நல்ல நூல்நிலையங்கள் இல்லையே என வருத்தப்படுவார்கள். இந்தியாவைப்பற்றி அறிய, நூல்கள் அமெரிக்காவில்தான் இருக்கின்றன என்று கூறுவார்கள். பொருள்களின் விலைவாசியைப் பற்றி விசாரிக்கும் போதெல்லாம் அதை டாலரில் கணக்கிட்டுப் பார்ப்பார் கள். பெட்ரோலின் விலை அமெரிக்காவைப்போல் மூன்று பங்காக இருக்கிறது. ஆனால் ஏனைய பொருள்கள் யாவும் அமெரிக்க விலையில் ஐந்தில் ஒரு பங்குதான். நான் இரவு படுக்க வரும்போது ஒரு மணிநேரம் அவர்களிடம் பேசிக்கொண்டிருப்பேன். அன்று ஒவ்வொரு வர் செய்த வேலைகளையும், மறுநாள் திட்டங்களையும் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொள்வோம். விரும்பிய கேள்விகளையெல்லாம் கேட்பேன். உவகையோடும் உடனேயும் பதில் சொல்லுவார்கள். ஆராய்ச்சி செய்ய வந்திருக்கிறீர்களே, ஏன் குடும்பத் தோடு வந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். குடும்பமும் இங்கேயே இருந்தால் செய்யும் வேலையைச் செம்மையாகச் செய்யலாம். உணவு, விருப்பம்போல் அமையும். குடும் பத்தை விட்டுவிட்டு வந்தால் ஒழுக்கக் கேடாக நடந்து கொள்ள நேரும். அதனால் பல சிக்கல்கள் விளையும். இவற்றைவிட முக்கியமான காரணம் போர்க்களம் தவிர வேறு எங்கும் தம் கணவர்கள் தனியே செல்ல அமெரிக்கப் பெண்கள் விடுவதில்லை. இரவு உணவு மாலை 6-30 மணி அளவில் உண்பார் கள். 7-30க்குள் குழந்தைகளைத் தூங்கப் போட்டுவிடுவார். கள். சென்னையில் 75 அமெரிக்கக்குடும்பங்கள் இவர்களில் யாராவது வந்தால் விருந்து உள்ளன நடக்கும். அமெரிக்காவிலிருந்து யாராவது வந்தாலும் விருந்து ஏற்பாடு
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/259
Appearance